வரலாற்று பதிவு 118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் பெருவெள்ளம்.

வரலாற்று பதிவு 118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் பெருவெள்ளம்..!

Historical record 118 years ago Flood in the lake ..!



200 பேர் பலியான நாள் 

இன்று (12-11-1903)

Bright Zoom,

கடந்த நூற்றாண்டில் (1903) பெருவெள்ளம் ஏற்பட்டதையும், இதனால் வாணியம்பாடியில் 200 பேர் இறந்துபோனதையும், அப்போதைய ஆங்கிலேய அரசு பதிவு செய்துள்ளது. இன்றும் பெருவெள்ளத்தின் சாட்சியாக வாணியம்பாடி சந்தை மேட்டில் ஆங்கிலேயர்கள் வைத்துள்ள நினைவுத்தூண், இறந்துபோன 200 உயிர்களையும் வெள்ள அளவின் குறியீட்டையும் நினைவூட்டுகிறது. 


...


பாலாற்றில் வெள்ளம் கடந்தகால வரலாறு

வாணியம்பாடி பெருவெள்ளம்

பாலாற்றில் 1874, 1884, 1898-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டாலும், வரலாற்றில் துயரமான சம்பவம் 1903-ம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் அப்போதைய வாணியம்பாடி நகரின் மக்கள் தொகை 15,800 என்பது ஆங்கிலேயர்களின் கணக்கு. அந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, விடாமல் பெய்துகொண்டிருந்தது மழை. பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியான சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டத்தில் ஒரேயடியாய் கொட்டித்தீர்த்தது கனமழை.


மிகப்பெரிய பேத்தமங்கலா ஏரியின் பலமிக்க கரைகள் கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்தன. கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் தமிழகத்துக்குள் நுழைந்து கொடையாஞ்சி கிராமம் அருகே திடுமென வாணியம்பாடி நகரத்தை சுற்றிவளைத்தது வெள்ளம். வீட்டில் தூங்கியவர்கள் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே இரவில் வீடுகளையும், உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் மக்கள் இழந்தனர். வாணியம்பாடி பெரு வெள்ளத்தில் 200 பேர் இறந்ததாக 1903-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த நாளிதழ்கள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டன.


அந்த செய்தியில், ‘இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபுவிடம் இருந்து அவசர தந்தி லண்டனுக்கு சென்றுள்ளது. மெட்ராஸில் இருந்து கிடைத்த தகவல்படி, சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாற்றில் நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியின் பாதி நகரம் அழிந்தது. 200 பேர் இறந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்றும் வாணியம்பாடி நகரில் பார்க்க முடியும். கொடையாஞ்சியில் பிரிந்து வாணியம்பாடி நகரத்தை மூன்றாக பிரித்து ஓடும் பாலாறு, மீண்டும் வளையாம்பட்டில் இணைந்து செல்கிறது. பெருவெள்ளத்தின் சாட்சியாக வாணியம்பாடி சந்தை மேட்டில் ஆங்கிலேயர்கள் வைத்துள்ள நினைவுத்தூண், இறந்துபோன 200 உயிர்களையும் வெள்ள அளவின் குறியீட்டையும் நினைவூட்டுகிறது.



வரலாற்று பதிவு 118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் பெருவெள்ளம். வரலாற்று பதிவு 118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் பெருவெள்ளம். Reviewed by Bright Zoom on November 12, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.