போட்டித் தேர்வுகள் பொதுத்தமிழ் - இலக்கியம் முத்தொள்ளாயிரம் Competitive exams General Tamil - Literature Thirty thousand in tamil,

TNPSC  - 2022 !!

போட்டித் தேர்வுகள்

பொதுத்தமிழ் - இலக்கியம் 

முத்தொள்ளாயிரம் 

Competitive exams

General Tamil - Literature

Thirty thousand in tamil,

Bright Zoom


★  வெண்பாவால் எழுதப்பட்ட நு}ல் முத்தொள்ளாயிரம்.

★  இது சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.

★  மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.

★ மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நு}ல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.

★ நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நு}லிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.

★ முத்தொள்ளாயிரம் என்னும் பெயரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

★ ஆசிரியரின் பெயரை அறிய முடியவில்லை. இவர் ஐந்தாம் நு}ற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

★ சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடுகிறது.


சிறப்புத் தொடர்:

'நச்சிலைவேல் கோக்கோதை நாடு"


சொல்லும் பொருளும்:

★ அள்ளல் - சேறு

★ பழனம் - நீர் மிக்க வயல்

★ வெரீஇ - அஞ்சி

★ நந்து - சங்கு


 

போட்டித் தேர்வுகள் பொதுத்தமிழ் - இலக்கியம் முத்தொள்ளாயிரம் Competitive exams General Tamil - Literature Thirty thousand in tamil, போட்டித் தேர்வுகள்  பொதுத்தமிழ் - இலக்கியம்   முத்தொள்ளாயிரம்   Competitive exams  General Tamil - Literature   Thirty thousand in tamil, Reviewed by Bright Zoom on May 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.