ஆதார் பயன்பாடுபற்றி தெரிந்துகொள்ள
To know about Aadhaar application.?
Bright Zoom,
உங்கள் ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது.. தெரியுமா உங்களுக்கு?
ஆதார் பயன்பாடு...!!
நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிப்போன ஆதார் அட்டையினை யாரேனும் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள சில வழிகள்:
ஆதார் அட்டை பயன்கள்:
ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க எண்ணாகும். இது அரசு சார்ந்த மானியங்கள், வங்கி பரிவர்த்தனை, வருமான வரி தாக்கல், தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு போன்றவற்றை பெறப் பயன்படுகிறது.
சமீப காலங்களில், ஆதார் அட்டைதாரர் விவரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சரிபார்க்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது.
எங்கெங்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது என்பதை சரிபார்க்கும் வழிமுறை:
நிலை 1:
https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
நிலை 2:
"என் ஆதார்" என்பதன் கீழ், "ஆதார் சேவைகள்" என்பதில் உள்ள, "ஆதார் அங்கீகார வரலாறு" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிலை 3:
இந்த புதிய பக்கத்தில் log in செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்.
நிலை 4:
அங்கு கொடுக்கப்பட்ட "CAPTCHA குறியீட்டை" உள்ளிடவும்.
நிலை 5:
இந்த பக்கத்தில் திறக்கப்படும் "Generate OTP" பட்டனை தேர்வு செய்யவும்.
நிலை 6:
தகவலின் காலம் மற்றும் முந்தைய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.
நிலை 7:
அடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் SMS மூலம் அனுப்பப்பட்ட OTP உள்ளிடவும்.
நிலை 8:
ஆதார் அட்டை சம்பந்தமான அனைத்து தகவல்களும், தேதி, நேரம் மற்றும் ஆதார் அங்கீகாரக் கோரிக்கைகளின் வகை போன்ற விவரங்கள், நீங்கள் முன்பு தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் (அதிகபட்சமாக 50 பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்) தோன்றும்.
இதன்மூலம் நமது ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை எளிதாக அறியமுடியும்.
ஆதாரின் தவறான பயன்பாடுகளைத் தவிர்க்க பின்வருவனவற்றை மனதில் வைக்க வேண்டும்.
UIDAIஇன் பூட்டு அல்லது திறத்தல் அம்சத்தை கவனமாகப் பயன்படுத்தவும்.
ஆதார் OTPஐ யாருக்கும் பகிர வேண்டாம்.
மெய்நிகர் ஐடியைப்(Virtual ID) பயன்படுத்தி ஆதார் எண்களைக் கண்காணிக்க முடியாது.
UIDAIஇல் உள்ள "ஆதார் அங்கீகார வரலாறு" பகுதியின் உதவியுடன் ஆதார் பயன்பாட்டு வரலாற்றை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், UIDAIஇன் இணையதளத்தை அணுகுவதன் மூலம் உடனடியாக அதை தடுக்கலாம்.
ஆதார் பயன்பாட்டில் ஏதேனும் முரண்பாடுகள் தோன்றினால், 1947 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

No comments: