காவலர் தேர்வு - 2023 -24 பொது அறிவு : சுத்தம் மற்றும் சுகாதாரம் | TN Police - 2023 - 24 G.K. Cleanliness and hygiene.
காவலர் தேர்வு - 2023 -24
பொது அறிவு : சுத்தம் மற்றும் சுகாதாரம்
TN Police - 2023 - 24 G.K. Cleanliness and hygiene.
1. ஒரு உயிரினம் எந்த ஒரு பொருளை (தாவர அல்லது விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருள்) ஊட்டச்சத்திற்காக உட்கொள்கிறதோ அந்தப் பொருள் ------------ என்று வரையறுக்கப்படுகிறது.
- உணவு
2. ஊட்டச்சத்துக்கள் எத்தனை வகைப்படும்?
- ஆறு அவை :
1. கார்போஹைட்ரேட்டுகள்
2. புரதங்கள்
3. கொழுப்புகள்
4. வைட்டமின்கள்
5. தாது உப்புக்கள்
6. நீர்
3. கார்போஹைட்ரேட்டுகள் என்பவை கார்பன்இ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை ------------- என்ற விகிதத்தில் கொண்ட அங்ககக் கூட்டுப்பொருள்களை கொண்டதாகும்.
- 1:2:1
4. கார்போஹைட்ரேட்டுகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
★ சர்க்கரை
★ ஸ்டார்ச்
★ செல்லுலோஸ்
5. மனித உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ------- ஆகும்.
- புரதங்கள்
6. நம் உடலில் எத்தனை அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன?
- ஒன்பது
1. ஃபினைல் அலனைன்
2. வேலைன்
3. திரியோனைன்
4. டிரிப்டோஃபேன்
5. மெத்தியோனைன்
6. லுசைன்
7. ஐசோ லுசைன்
8. லைசின்
9. ஹிஸ்டிடைன்.
7. கொழுப்புகள் --------- என்று அழைக்கப்படுகிறது. - 'முக்கிளிசரைடுகள்" அல்லது 'மூன்று கிளிசரைடுகள்"
8. ----------- என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
- டாக்டர் ஃபன்க்
9. அதிகப்படியான புரத குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
- குவாசியோர்கர்
10. எந்த நாள் உலக அயோடின் குறைபாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது?
- அக்டோபர் 21
11. வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ----------- என்று அழைக்கப்படுகிறது.
- வைட்டமினோசிஸ்
12. ----------- என்பர் அறிவியலின் ஒரு பிரிவான நுண்ணுயிரியிலைத் தோற்றுவித்தார்.
- லூயிஸ் பாஸ்ட.
No comments: