மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க ஆசையா? நீட் மதிப்பெண் தேவையில்லை; ஏராளமான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன!|Interested in pursuing medical courses? NEET score is not required; There are many paramedical courses available!

மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க ஆசையா? நீட் மதிப்பெண் தேவையில்லை; ஏராளமான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன!|Interested in pursuing medical courses?  NEET score is not required;  There are many paramedical courses available!

மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும். இருப்பினும் எல்லோராலும் எம்.பி.பி.எஸ் இடங்களை பெற முடிவதில்லை. ஆனால், மருத்துவம் சார்ந்த படிப்புகள் ஏராளாமாக உள்ளன. அவை சிறந்த எதிர்காலத்தையும் வழங்குகின்றன. அந்தப் படிப்புகள் குறித்து இப்போது பார்ப்போம்.

12 ஆம் வகுப்புக்குப் பிறகு, மருத்துவம் சார்ந்து படிக்க 32க்கும் மேற்பட்ட பாராமெடிக்கல் படிப்புகள் உள்ளன, இதில் சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்புகள் அடங்கும். பாராமெடிக்கல் சயின்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு துறையானது மருத்துவப் பயிற்சி, ரேடியோகிராபி, முதலுதவி, உடல் சிகிச்சை மற்றும் உணவுமுறை போன்ற தொழில்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.


மெடிக்கல் லேப் டெக்னீசியன் படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. லேப் டெக்னீசியன், லேப் சூப்பர்வைசர், லேப் மேனேஜர் வேலைகளில் சேரலாம்.


ரேடியேஷன் டெக்னாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. ரேடியலஜிக் டெக்னாலஜிஸ்ட், ரேடியேஷன் தெரபிஸ்ட் வேலைகளில் சேரலாம்.


ஆப்டோமெட்ரி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. ஆப்டோமெட்ரிஸ்ட், பார்வை ஆலோசகர் வேலைகளில் சேரலாம்.


பிசியோதெரபி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (4.5 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. பிசியோதெரபிஸ்ட், மறுவாழ்வு நிபுணர் பணிகளில் சேரலாம்.


ஆக்குபேஷனல் தெரபி கோர்ஸ் 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (4 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. தொழில்சார் சிகிச்சையாளர், மறுவாழ்வு சிகிச்சையாளர் பணிகளில் சேரலாம்.


நியூட்ரிஷன் & டயட்டிக்ஸ் கோர்ஸ் 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. உணவியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் வேலைகளில் சேரலாம்.


ஆடியோலஜி & ஸ்பீச்-லாங்குவேஜ் பேத்தாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (4 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. ஆடியோலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் வேலைகளில் சேரலாம்.


புரோஸ்டெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ் படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (4 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. செயற்கை மருத்துவர், ஆர்த்தோட்டிஸ்ட் பணிகளில் சேரலாம்.


பல் சுகாதாரப் படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. பல் சுகாதார நிபுணர், வாய்வழி சுகாதார ஆலோசகர் வேலைகளில் சேரலாம்.


டயாலிசிஸ் டெக்னாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. டயாலிசிஸ் டெக்னீஷியன், நெப்ராலஜி டெக்னாலஜிஸ்ட் பணிகளில் சேரலாம்.


மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னாலஜி கோர்ஸ் 

டிப்ளமோ (1-2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீஷியன், ஹெல்த் இன்ஃபர்மேஷன் மேனேஜர் வேலைகளில் சேரலாம்.


ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன், சர்ஜிக்கல் டெக்னாலஜிஸ்ட் பணிகளில் சேரலாம்.


சுவாச சிகிச்சை படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3-4 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. சுவாச சிகிச்சை நிபுணர், நுரையீரல் செயல்பாடு தொழில்நுட்பவியலாளர் வேலைகளில் சேரலாம்.


அனஸ்தீசியா டெக்னாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. அனஸ்தீசியா டெக்னீஷியன், அனஸ்தீசியா டெக்னாலஜிஸ்ட் பணிகளில் சேரலாம்.


மருத்துவ இமேஜிங் டெக்னாலஜி படிப்பு 

டிப்ளமோ (2 ஆண்டுகள்), இளங்கலை (3 ஆண்டுகள்) படிப்புகள் உள்ளன. மருத்துவ இமேஜிங் டெக்னாலஜிஸ்ட், எம்.ஆர்.ஐ டெக்னாலஜிஸ்ட் வேலைகளில் சேரலாம்



மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க ஆசையா? நீட் மதிப்பெண் தேவையில்லை; ஏராளமான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன!|Interested in pursuing medical courses? NEET score is not required; There are many paramedical courses available! மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்க ஆசையா? நீட் மதிப்பெண் தேவையில்லை; ஏராளமான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன!|Interested in pursuing medical courses?  NEET score is not required;  There are many paramedical courses available! Reviewed by Bright Zoom on April 17, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.