அன்னிய நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII)
அன்னிய நேரடி முதலீடு என்றால் என்ன ?
இந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும்.
இதனால் அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் முதலீட்டாளர்கள் அவர்கள் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்களின் பங்குதாரர்கள் ஆகின்றனர். அவர்கள் தங்கள் பெற்ற பங்கின் முலம் அந்நிறுவனத்தை கட்டுபடுத்த முடியும்.
அன்னிய நேரடி முதலீடு இரண்டு வழித்தடங்களுக்கான உள்ளன அவை தானியங்கு வழி (ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு ஒப்புதல் தேவையில்லை) மற்றும் அரசு வழி (தானியங்கி வழி கீழ் வராதவை இதன் முலம் அனுமதி பெற வேண்டும்)அன்னிய நேரடிமுதலீட்டளர்கள் அவர்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள், மற்றும் அவர்கள் முதலீடு செய்த தொகை சரியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை கன்னனிக்க முடியும்.
ஏன் ஒருவர் அல்லது ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில்முதலீடு செய்ய விரும்புகிறது?
அதற்க்கான சில முக்கிய கரணங்கள் :
+ வரி சலுகைகள்
+ இந்தியாவில் குறிப்பிட்ட வர்த்தகம் செய்வது லாபம் தருவதாக இருக்கின்றது
+ வர்த்தக வாய்ப்பு
பெரும்பாலும் இந்த முன்று முக்கிய காரணமாக இருக்கிறது.
அன்னிய நேரடி முதலீட்டால் ஏற்ப்படும் நன்மைகள்:
1. அன்னிய நேரடி முதலீடு பொருளாதாரத்தில் அதிக மூலதனம் கொண்டது ஆகும்.
2. இதன் முலம் உள்நாட்டு பொருளாதாரம் வளம் பெரும் மற்றும் தொழிற்சாலைகள் உருவாகும்.
3. வருமான வரி துறைக்கு அதிக வருமானம் வர வழிவகை செய்யும்.
4. புதிய வேலைவைப்புகள் உண்டாகும்.
5. இந்தியாவிற்கு தேவையான அந்நிய செலாவணி = வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வர வழிவகை செய்யும்.
அன்னிய நேரடி முதலீட்டால் ஏற்ப்படும் தீமைகள்:
1. உள்நாட்டு நிறுவனங்களின் சந்தை பங்கை இழக்க நேரிடும்.
2. சிறுவணிகத்தில் கொண்டு வரப்படும் அன்னிய நேரடி முதலீட்டால் சிறு விவசாயிகள், வியாபாரிகள் அவர்களின் தொழிலை இலக்க நேரிடும்.
3. FDI இல் வழங்கப்படும் வரிசலுகை காலம் முடிந்த பிறகு தனது பங்கை திரும்ப பெற்றுக்கொள்வது ஆகிய காரணத்தால் பலர் வேலைவாய்ப்பு இழக்க நேரிடும் மற்றும் நாட்டின் பொருளாதரத்தில் பதிப்பு ஏற்ப்படும்.
==================================================================
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட துறைகள்:
1. ரயில்வே = 100%
2. பாதுகாப்பு = 49%
3. தொலைத்தொடர்பு = 49%
4. காப்பீடு = 49%
5. செய்தி ஊடகம் = தற்போது 26% மற்றும் 49% ஆக அதிகரிக்க ஆலோசனையில் உள்ளது.
6. கூரியர் சேவைகள் = 100%
7. ஒற்றை பிராண்ட் வர்த்தகம் (Single Brand Retail) = 100%
8. சிவில் விமானப் போக்குவரத்து = 49%
9. கட்டுமான துறை = 100%
10. கடன் விவர நிறுவனங்கள் = 74%
11. பவர் டிரேடிங் = 49%
12. பண்டப் பரிமாற்றம் (Commodity Exchanges) = 49%
13. எண்ணெய் சுத்திகரிப்பு = 49%
14. பங்குச் சந்தை = 49%
===============================================================
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இல்லாத துறைகள்:
1. அணு சக்தி
2. விவசாய மற்றும் தோட்டக்களை
3. சூதாட்டம், பந்தயம் மற்றும் லாட்டரி
4. சிட் பண்ட்
5. ரியல் எஸ்டேட்
6. சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி.
==============================================================
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors – FII)
இந்தியாவிற்கு வெளியே உள்ள நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனத்தின் பங்குகளின் மீது முதலீடு செய்பவர்கள். அவர்களின் முதலீடு குறைவாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு நிறுவனத்தை கட்டுபடுத்தும் அதிகாரம் இல்லை.
இதயே வேறு முறையில் கூறினால் ,
எ.கா. – நான் ஹோண்டா நிறுவனத்தின் பங்கை வாங்கமுடியாது ஏனென்றால் , இதில் முதலீடு செய்பவர் இந்திய குடியுரிமை இல்லாதவராக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் இந்த பங்கு சந்தையில் பங்கு பெற செபியிடம் அனுமதி பெற வேண்டும்
FII க்கள் நிதி சந்தையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர், இவர்கள் இந்தியாவில் செய்யும் முதலீட்டின் காரணமாக இந்திய பங்கு சந்தையில் ஒரு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றது , மேலும் அதிக முதலிட்லர்களை கவர்கின்றது .
FDI யை போன்றே FII யும் அந்நிய செலாவணியை ஈட்டி தருகின்றது
ஒருவேளை இந்திய பங்கு சந்தை சரிவில் சென்றுக்கொண்டு இருக்குமானால் இவர்கள் தங்கள் பங்கை விற்றுவிட்டு வேறு ஒரு நாட்டிலோ அல்லது வேறு வலுவாக ஏறுமுகத்தில் உள்ள பங்கு சந்தையில் தங்களது முதலிட்டை செய்வார்கள்,இவர்களும் முதலீடு பங்கு சந்தையின் நிலவரத்தை பொருத்து அமையும்.
சில குறிப்புகள்:
+ அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் 1991 ல் அப்போதைய நிதி அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
+ 2014 நிடியாண்டில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்தது, அதற்க்கு முந்திய ஆண்டு மொரிஷியஸ் முதல் இடத்தில் இருந்தது.
+ கடந்த காலங்களில் சேவை துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகமா காணப்பட்டது
+ தற்போது “Make in India” என்ற திட்டத்தின் முலம் உற்பத்தி துறையில் அதன் கவனம் செல்கின்றது .

பங்குச்சந்தை பற்றிய தொகுப்பு
Reviewed by Bright Zoom
on
December 30, 2017
Rating:
No comments: