சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் பற்றிய சிறப்புத் தகவல்கள் !!
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது.
பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும்.
கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதைக் காணலாம்.
ஹேவிளம்பி ஆண்டு தை மாதம் 18-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம். இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் பற்றிய சிறப்புத் தகவல்கள் !!
Reviewed by Bright Zoom
on
January 23, 2018
Rating:
No comments: