திட்டங்கள்
கறவை மாட்டுக் கடன் எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002
விரிவாக்கம்
ஆவின் மூலம் வழங்கப்படும் கறவை மாட்டுக் கடன் தொடர்பாக, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்யும். இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் பொது காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடன் வழங்கப்படும்
ஆட்டோ கடன் திட்டம்
மற்ற விவரங்கள்
அ. பயனாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவாகள் மற்றும் பார்சீ இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆ. பயனாளிகள் வருட வருமானம் பின்வருமாறு இருக்க வேண்டும் கிராமப்பகுதியை சார்நதவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40,000/-க்கு மேற்படாமலும், நகரப் பகுதியை சார்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.55,000/-க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். பயனடைவோரின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். ஆட்டோ ஓட்டுநர் Badge இருக்க வேண்டும்
எப்படி பெறுவது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
விரிவாக்கம்
தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தாய்கோ வங்கி மூலம் இக்கடன் 6சதம் வட்டியில் அளிக்கப்படுகிறது. கடன் தொகை எல்.பி.ஜி ஆட்டோ - ரூ.1.21 இலட்சம் மற்ற ஆட்டோ - ரூ.1.00 இலட்சம் பயனடைவோரின் பங்குத்தொகை 5சதம் டாம்கோ பங்குத்தொகை 10சதம் தேசிய கழகத்தின் பங்குத்தொகை 85சதம் கடன் தொகையில் 10சதம் தாய்கோ வங்கிக்கு வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். இக்கடன் 48 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும்.
இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்
எப்படி பெறுவது
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விரிவாக்கம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர். சிறப்பு கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது.
உணவு மானியம் வழங்குதல்
மற்ற விவரங்கள்
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எப்படி பெறுவது
சம்பந்தப்பட்ட தனியார் விடுதி நிர்வாகத் தலைவர்கள் மூலமாக கேட்புப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தனியே விண்ணப்பம் ஏதும் அளிக்கத் தேவையில்லை.
விரிவாக்கம்
இத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ, மாணவியருக்கு, உணவு மானியத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.650/- வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
எப்படி பெறுவது
பொது தகவல் அலுவலர்,மேல் முறையீட்டு அலுவலர்
விரிவாக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உறுப்பினராகவும் நலத்திட்ட உதவிகள் (ம) மிதி வண்டிகள் பெற தகுதியுடையவராவர். பதிவு பெற்றவுடன் உறுப்பினர் இறப்பின், அவரைச் சார்ந்தவர்கள் (legal heirs) என்ற பட்டியலில் மனைவி அல்லது கணவன் (ii) பிள்ளைகள் (iii) விதவை மற்றும் முன்னரே இறந்த விட்ட காலமான மகளின் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர்.
குடும்பம் என்பதில், ஆண் உறுப்பினராக இருப்பின் அவரது மனைவி, திருமணமான அல்லது திருமணமாகாத அவரது பிள்ளைகள், சார்ந்துள்ள பெற்றோர், விதவை மருமகள், உறுப்பினரின் இறந்த மகனின் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர். பெண் உறுப்பினராக இருப்பின், அவரது கணவர், பிள்ளைகள் ஆகியோர் குடும்பம் என்ற வரைமுறையில் அடங்குவர். 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கும் ஓர் அடையாள அட்டை இலவசமாக வாரியத்தால் வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் மீண்டும் பதிவை புதுப்பிக்க வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி ஒன்று வழங்கப்படுகிறது.
கல்விக் கடன்
மற்ற விவரங்கள்
அ. பயனாளிகள் தமிழ்நாட்டைச் சார்ந்த இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆ. பயனாளிகள் வருட வருமானம் பின்வருமாறு இருக்க வேண்டும். கிராமப்பகுதியை சார்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40,000/-க்கு மேற்படாமலும், நகரப் பகுதியை சார்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.55,000/-க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். பயனடைவோரின் வயது 16-32க்குள் இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், தொழிற் கல்வி மற்றும் இதற்கு ஈடான சிறந்த தொழிற் மற்றும் பயிற்சி கல்விகள் பயில வேண்டும் (MBBS / BDS / BUMS / B.Pharm / B.Sc. (Nursing) / B.V.Sc., / B.Sc. Agri. / B.E. / B.Tech. / B.Arch. / B.Ed. / Diploma in Technical Courses / MBA / BCA / MCA etc.) 1. சேர்க்கை கட்டணம் பயிற்றுவிப்பு 2. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் 3. தேர்வுக் கட்டணம். 4.விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்). (1) சாதிச் சான்றிதழ் (2) பள்ளி மாற்று சான்றிதழ், (3) வருமான சான்றிதழ் (4) இருப்பிட சான்றிதழ் (5) கல்விச் சான்றிதழ் (6) கல்லூரி கட்டண விவரங்கள் மற்றும் (7) இதர இனங்கள், (ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்) ஆகியவற்றின் நகல்கள்.
எப்படி பெறுவது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி
விரிவாக்கம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் தொழிற்கல்வி மற்றும் மருத்துவ கல்வி பயில கல்விக் கடன் அளிக்கப்படும். ஒருவருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000/- முறையே மற்றும் ஐந்து வருடத்திற்கு ரூ.2,50,000/- வரையில் 3சதம் வட்டியில் கடன் வழங்கப்படும்.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி (ம) நிதிக் கழகம் - 90சதம் டாம்கோ பங்குத் தொகை - 10சதம் மொத்தம் - 100சதம் கல்வி பருவக்காலம் முடிந்த தேதியிலிருந்து, அதாவது 6வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டி தொகை வசூலிக்கப்படும். கல்வியை பாதியில் நிறுத்தும் பட்சத்தில் பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் அதற்கான வட்டியுடன் ஒரே தவணையாக திரும்ப செலுத்த வேண்டும்.
கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல்
மற்ற விவரங்கள்
பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.25,000/-க்குள் இருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவியர் பயில வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
எப்படி பெறுவது
சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
விரிவாக்கம்
3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை - ஆண்டுக்கு ரூ.500/- 6ஆம் வகுப்பு - ஆண்டுக்கு ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சிறுகடன்
மற்ற விவரங்கள்
பயனாளி,சிறுபான்மை சுயஉதவி குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். மேலும், அந்த குழு குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். சுய உதவி குழுவில் அதிகபட்ச அங்கத்தினர்கள் - 20 சுய உதவி குழுவில் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் - 10 60சதம் சிறுபான்மையினரும் 40 சதம் பிற்பட்டோர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஊனமுற்றோர் அடங்கிய சுயஉதவிக் குழுவும் சிறுபான்மை சுயஉதவிக் குழுவாக கருதப்பட்டு எல்லா பயனாளிகளுக்கும் சிறுகடன் அளிக்கப்படும்.
ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ.40,000/-க்கும் நகர்புறங்களில் ரூ.55,000/-க்கும் மிகாது இருத்தல் வேண்டும். சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் 1. சாதி, ஆண்டு வருமானம் சான்றிதழ். 2. உணவு பங்கீடு அட்டை அல்லது 3. இருப்பிட சான்றிதழ் மற்றும் 4. வங்கிகள் கோரும்
ஆவணங்கள்
எப்படி பெறுவது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
விரிவாக்கம்
அதிகபட்சமாக ரூ.25,000/- 4சதம் வட்டியில் சிறுபான்மையின சுய உதவிக் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கடனாக வழங்கப்படுகிறது. டாம்கோ பங்கு தொகை – 90சதம் தேசிய கழகத்தின் பங்கு தொகை - 10சதம் 100சதம் ஆண்டு வட்டி விகிதம் 4சதம் இக்கடன் 36 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம்
எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.
விரிவாக்கம்
அரசாணை (நிலை) எண் 111, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 31.12.2007-ல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகள் அமைத்து பயனடையும் வகையில் மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதற்கான திட்டம் குறித்து ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் இக்கழகத்தினால் செயற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் 50சதம் வரை ரூ.50,000/-க்கு மிகாமல் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரூ.50.00 கோடி வரை மேற்படி மானியத்திற்காக கழகத்திற்கு அரசு வழங்கியுள்ளது. (2007-08-ல் ரூ.25.00 கோடி மற்றும் 2008-09-ல் ரூ.25.00 கோடி)
சிறுபான்மையினர் நலத்துறை - உருது மொழி பயிலும் மாணவ / மாணவியருக்கு மாநில அளவிலான பரிசுகள்
எப்படி பெறுவது
மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ்களுடன் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
விரிவாக்கம்
பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகளில் உருதுமொழியை முதல் அல்லது இரண்டாவது மொழியாக பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது.
சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயரிடுவோருக்கான சிறு கடன் திட்டம்
எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.
விரிவாக்கம்
இக்கடன் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 4சதம் , இக்கழகத்தின் பங்கு 5சதம் தேசிய கழகத்தின் பங்கு 9சதம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) - ஆடவருக்கான சிறு கடன் திட்டம்
எப்படி பெறுவது
கடன் விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் அலுவலகம் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்கள் / கூட்டுறவுச்சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், அல்லது கூட்டுறவு வங்கிகளில் இலவசமாக அளிக்கப்படும்
விரிவாக்கம்
ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சமாக ரூ.2000/-மும், அதிகபட்சமாக ரூ.30,000/-மும் வழங்கப்படும்.
திரும்பச் செலுத்தும் காலம் -
குறைந்தபட்சம் 12 மாதங்கள், அதிகபட்சம் 3 வருடங்கள் (சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு சுய உதவிக் குழுவின் மூலம் கடன் தொகை விநியோகம் செய்யப்படும்) பங்கு வீதம் பயனாளியின் பங்கு - 5 சதவிதம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு - 5 சதவிதம் தேசிய கழகத்தின் பங்கு - 90 சதவிதம் வட்டி வீதம் - கூட்டுறவு வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு - 5 சதவிதம் (ஆண்டிற்கு)
தமிழ் நாடு மாநில ஹஜ் குழு
மற்ற விவரங்கள்
(அ) சிறப்பு வகை- 1. 29.2.2012 அன்று 70 வயது பூர்த்தியான விண்ணப்பதாரர்களாக இருந்தால், ஒரு பயணியுடன் துணைப் பயணி ஒருவரை ஹஜ் 2012-ற்காக குலுக்கலின்றி தெரிவு செய்ய இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. 2. ஹஜ் 2009 முதல் 2011-ல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக தெரிவு செய்யப்படாமல், ஹஜ் 2012-ற்கு விண்ணப்பித்த பயணிகளின் விண்ணப்பங்களையும் தெரிவு செய்ய இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
(ஆ) ஒவ்வொரு மாநிலத்திற்கான ஒதுக்கீடு- சவூதி அரேபிய அரசால் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள முஸ்லிம் மக்கள் தொகையின் அடிப்படையிலும், ஒவ்வொரு மாநிலத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்து, இதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி கணினி மூலம் குலுக்கல் (குறா) நடத்தப்படுகிறது. உரிய வகையில் தெரியப்படுத்தப்பட்டு விண்ணப்பதாரர்களின் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படுவதால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது.
இ) பன்னாட்டு கடவுச்சீட்டு- முன்பு, புனிதப் பயணிகள், பயணிகளுக்கான தற்காலிக அனுமதிச் சீட்டுகளின் மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால் சவூதி அரசின் வலியுறுத்தல் காரணமாக ஹஜ் 2009-லிருந்து பயணிகள், பன்னாட்டு கடவுச் சீட்டுகளின் மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளகின்றனர். சென்னை, கோயமுத்தூர், மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் ஒன்றிணைந்து விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட்டுகளை உரிய சமயத்தில் பெறுவதற்கு ஏதுவாக -பாஸபோர்ட் மேளா- க்களை மாநில ஹஜ் குழு நடத்துகிறது.
எப்படி பெறுவது
உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, மூன்றாவது மாடி, -ரோஸி டவர்-, எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி ரோடு, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), சென்னை - 600 034. தொலைபேசி எண். - 044-28252519 / 28227617 மின் அஞ்சல் - tnhajj786(at)vsnl.com இணைய தளம் - www.hajjtn.in நிகரி – 28276980
விரிவாக்கம்
ஹஜ் குழுச் சட்டம், 2002-லுள்ள பிரிவுகளின்படி, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஹஜ் புனிதப் பயணிகளின் நலனைக் கவனிப்பதற்காகவும், ஹஜ் புனிதப் பயணத்தினை திறன்படவும் சிறப்பாகவும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும், தமிழ் நாடு மாநில ஹஜ் குழு என்ற அமைப்பு தமிழ் நாடு அரசால் அமைக்கப்பட்டது. மத்திய ஹஜ் குழு, மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியோரால் வழங்கப்படும் முழுமையான வழிமுறைகளுக்குட்பட்டு ஹஜ் குழு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
தனி நபர் கடன்
மற்ற விவரங்கள்
சிறுபான்மையினர் இனத்தவராக (முஸ்லீம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவாகள், பார்சீக்கள்) இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/- க்கும் நகர்புறங்களில் ரூ.55,000/-க்கும் மிகாது இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும். சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சாதி, ஆண்டு வருமானம் சான்றிதழ்.
உணவு பங்கீடு அட்டை அல்லது 3. இருப்பிட சான்றிதழ் மற்றும்
வங்கிகள் கோரும் ஆவணங்கள்
எப்படி பெறுவது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது நன்றாக இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
விரிவாக்கம்
தனி நபர் கடன் தனி நபருக்கு ரூ.1 இலட்சம் வரை 6 வட்டியில் கடனுதவி கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. ரூ.5 இலட்சம் வரை தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் அனுமதியோடு கடன் வழங்கப்படும். கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு பயனடைவோரின் பங்குத்தொகை 5சதம் டாம்கோ பங்குத்தொகை 10சதம் தேசிய கழகத்தின் பங்குத்தொகை 85சதம் கடன் தொகையை 60 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும். இக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது நன்றாக இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுய தொழில் துவங்க கடன் திட்டம்
எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.
விரிவாக்கம்
இக்கடன் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை, பொது காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடன் வழங்கப்படும்.பங்கு வீதம் வட்டி வீதம் (ரூ. 5,00,000/- (ரூ. 5,00,000/- வரை) க்கு மேல்) பயனாளியின் பங்கு 5 சதம் - - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் 10 சதம் 6 சதம் 8 சதம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு தேசிய கழகத்தின் பங்கு 85 சதம் 6 சதம் 8 சதம்
தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
மற்ற விவரங்கள்
தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
எப்படி பெறுவது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள்
விரிவாக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
நடமாடும் சலவையகம் அமைத்தல்
எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.
விரிவாக்கம்
நடமாடும் சலவையகம் அமைக்க
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக, நபர் ஒருவருக்கு ரூ.5,000/- வழங்கப்படுகிறது. (மானியம் ரூ.2,000/- கடன் ரூ.3,000/-) 1000 நபர்களுக்கு பொது காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடனாக வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்கடன் 6சதம் (ஆண்டிற்கு) வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள்
மற்ற விவரங்கள்
மிபிவ. / சீ.ம. (இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள்)
விரிவாக்கம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டிலுள்ள தொழில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியருக்கு பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போக்குவரத்து இனக் கடன்
மற்ற விவரங்கள்
சிறுபான்மையினர் இனத்தவராக (முஸ்லீம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவாகள், பார்சீக்கள்) இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கும் நகர்புறங்களில் ரூ.55,000/-க்கும் மிகாது இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும். சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் 1. சாதி, ஆண்டு வருமானம் சான்றிதழ். 2. உணவு பங்கீடு அட்டை அல்லது 3. இருப்பிட சான்றிதழ் மற்றும் 4. வங்கிகள் கோரும் ஆவணங்கள்
எப்படி பெறுவது
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது நன்றாக இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
விரிவாக்கம்
இத்திட்டத்தின் கீழ் ரூ.3.13 இலட்சம் கடன் தொகையாக 10 சதவீத வட்டியில் நான்கு சக்கர வாகனங்கள் முறையே கார், வேன் மற்றும் டிராக்டர் ஆகியவைகள் வாங்க கடன் தொகைகள் இக்கழகம் மூலம் வழங்கப்படுகின்றன. டாம்கோ பங்கு 90சதம் பயனாளி பங்கு 10சதம்
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் துவங்க கடன் திட்டம்
எப்படி பெறுவது
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.
விரிவாக்கம்
இக்கடன் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை, பொது காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடன் வழங்கப்படும். பங்கு வீதம் வட்டி வீதம் (ரூ. 5,00,000/- (ரூ. 5,00,000/- வரை) க்கு மேல்) பயனாளியின் பங்கு 5 சதம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் 10 சதம் 6 சதம் 8 சதம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு தேசிய கழகத்தின் பங்கு 85 சதம் 6 சதம் 8 சதம்
மறுவாழ்வு நிதியுதவி வழங்குதல்
மற்ற விவரங்கள்
விண்ணப்பதாரர் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவராய் இருப்பின் மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவாக்கம்
இனக்கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாதவகையில் ஊனமுற்றிருந்தால் பெற்றோர் ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பெருங்குற்றங்களாக கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன்முறையாக சிறு குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து மீண்டவராக இருத்தல்வேண்டும்.
இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு நிதியுதவி அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆண்டு வருமானம், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு ரூ.40,000/-க்கு மிகாமலும், நகர்புறங்களில் வசிப்போருக்கு ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.vஇந்திய தண்டனைச்சட்டம் (Indian Penal Code) விதிகளின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் மற்றும் தண்டனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
விரிவாக்கம்
தமிழ்நாட்டில் வாழும் வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும். சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.10 இலட்சம் இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்
மற்ற விவரங்கள்
பி.மி.பி. (ம) சீ.ம வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கான நிபந்தனைகள்
1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. குடும்பத்தில் வேறு பட்டய/பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது
விரிவாக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம்
எப்படி பெறுவது
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலர் மற்றும் முகவரி - தனி அலுவலர், வன்னியர் பொது சொத்து நலவாரியம், நான்காவது தளம், எல்.எல்.ஏ.கட்டிடம், 735, அண்ணா சாலை, சென்னை - 600 002. தொலைபேசி எண். 044-28414383. புகார்கள் மற்றும் மேல் முறையீடுகளுக்கான வழிமுறைகள்- பொது- பொது மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், துறை அலுவலர்களின் செயல்பாடுகளில் குறையிருந்தாலும் அது குறித்து, முறையீடுகள் ஏதேனும் தெரிவிப்பதாக இருப்பின், கீழ்க்காணும் அலுவலர்களை நேரடியாகவோ அல்லது கடிதத் தொடர்புகள் மூலமாகவோ அணுகி அக்குறைகளைக் களைந்து கொள்ளலாம்-
அலுலர் பணியிடம் -
(a) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மேல் முறையீட்டுக்கு அணுக வேண்டிய அலுவலர் விவரம்-
i சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.
ii ஆணையர் / இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலம், சென்னை - 600 005.
iii ஆணையர் / இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம், சென்னை - 600 005.
iv ஆணையர் / இயக்குநர், சிறுபான்மையினர் நலம், சென்னை - 600 002. அலுலர் பணியிடம் -
(b) இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு), மதுரை மேல் முறையீட்டுக்கு அணுக வேண்டிய அலுவலர் விவரம் -
i மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை. ii ஆணையர் / இயக்குநர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம், சென்னை - 600 005. அலுலர் பணியிடம் -
(c) ஆணையர் இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலம், சென்னை - 600 005. மேல் முறையீட்டுக்கு அணுக வேண்டிய அலுவலர் விவரம் -அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்/ சென்னை -600 009.
அலுலர் பணியிடம் -
(d) ஆணையர் இயக்குநர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம், சென்னை - 600 005. மேல் முறையீட்டுக்கு அணுக வேண்டிய அலுவலர் விவரம்-அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்/ சென்னை -600 009. அலுலர் பணியிடம் - (v) ஆணையர் இயக்குநர் சிறுபான்மையினர் நலம், சென்னை - 600 002. மேல் முறையீட்டுக்கு அணுக வேண்டிய அலுவலர் விவரம் - அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்/ சென்னை -600 009.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மாநில அளவில் -பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம் பொது தகவல் அலுவலர் - தொடர்புடைய சார்புச் செயலாளர்கள் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) மேல்முறையீட்டு அதிகாரி -தொடர்புடைய துணைச் செயலாளர் / இணைச் செயலாளர். பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் / சிறப்பு அலுவலர் (திட்டம்) கணக்கு அலுவலர் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் / ஆணையர் மாநில அளவில் -பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம் பொது தகவல் அலுவலர் -மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் / கணக்கு அலுவலர் (கோரப்படும் தகவலுக்கு ஏற்ப) மேல்முறையீட்டு அதிகாரி -மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்குநர் / ஆணையர் மாநில அளவில் -சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் -சிறுபான்மையினர் நல ஆணையரின் நேர்முக உதவியாளர் மேல்முறையீட்டு அதிகாரி -சிறுபான்மையினர் நல இயக்குநர் / ஆணையர் மாவட்ட அளவில்- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொது தகவல் அலுவலர் -மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேல்முறையீட்டு அதிகாரி -மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட அளவில்- கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் பொது தகவல் அலுவலர் -இணை இயக்குநர் (க.சீ) மதுரை மேல்முறையீட்டு அதிகாரி -மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்குநர் / ஆணையர் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் முகவரி - இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எழிலகம் இணைப்புக்கட்டிடம், (2-ம் தளம்) சேப்பாக்கம், சென்னை - 600 005. தொலைபேசி - 044 - 28551442 நிகரி - 044 - 28552642 மின் அஞ்சல் dir-bcmw(at)tn.nic.in ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, எழிலகம் இணைப்புக்கட்டிடம், (2-ம் தளம்) சேப்பாக்கம், சென்னை - 600 005. தொலைபேசி - 044 - 28410042 நிகரி - 044 - 28592993 மின் அஞ்சல் dir-mbc(at)tn.nic.in
வன்னியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களை அடையாளம் கண்டு, அந்த அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றவும், அவைகளை ஒருங்கிணைத்து, அவைகள் உருவாக்கப்பட்ட நோக்கங்களின் பலன்கள் அனைத்து உரிய பகுதியனருக்கு செல்வதற்கான வழிவகைகளை காண்பதற்கும் வன்னியர் பொது சொத்து நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் தனி அலுவலராக திரு.கோ. சந்தானம், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னியர் பொது சொத்து தொடர்பாக சுமார் 76 அறக்கட்டளைகள் பற்றிய விவரங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்த அறக்கட்டளைகள் தொடர்பாக பல வழக்குகளும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் இப்பணிகளை செவ்வனே மேற்கொள்ள தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு இவ்வாரியம் சென்னையில் தேவநேய பாவாணர் நூலக கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்
மற்ற விவரங்கள்
பிவ, மிபிவ, சீம வகுப்பைச் சார்ந்து, சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.
விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குதல்
மற்ற விவரங்கள்
1. பிவ / மிபிவ / சீம வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/-க்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் 3. துணி தைக்க தெரிந்திருக்க வேண்டும். 4. வயது- 20-45 வரை.
எப்படி பெறுவது
சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.
விரிவாக்கம்
தையல் இயந்திரங்கள் வழங்குதல் (விலையில்லாமல்)
விலையில்லா மிதிவண்டிகள்
மற்ற விவரங்கள்
பள்ளி வளாகத்தினுள் உள்ள விடுதியில் / உறைவிட பள்ளியில் தங்கி பயில்பவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவதில்லைvஇலவச பேருந்து பயண அட்டை பெறும் மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை அணுகவும்
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதி உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பயிலும் சிறுபான்மையினர் மாணவ / மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
ஆதாரம் :
Reviewed by Bright Zoom
on
January 24, 2018
Rating:
No comments: