TNPSCபொது அறிவு
புதிய கற்காலம் - (கி.மு. 10,000 - கி.மு. 4,000)
புதிய கற்காலம் - (கி.மு. 10,000 - கி.மு. 4,000)
சக்கரம் புதிய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
புதிய கற்கால மனிதன் சக்கரத்தை பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்தான்.
மனிதன் உணவை சேகரிக்கும் நிலையிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறினான்
உணவை சமைத்துஉண்ண கற்றுக்கொண்டான்
ஆடு, மாடு, கோழி முதலியவற்றைப் பரிவுகாட்டித் தன்னுடன் வைத்து வளரத்தான்.
ஆடு , மாடுகளை மேய்த்து பால் இறைச்சி முதலியவற்றை உணவாகக் கொண்டான்.
பால், வெண்ணெய், தயிர; மற்றும் மோரின் பயனை அறிந்திருந்தனர;.
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலையைப் புதிய கற்காலம் எனலாம்.
புதிய கற்காலத்தில் மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டனர்
கோடாரி, எலும்புக் கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
புதிய கற்காலத்தில் மக்கள் களிமண் குடிசைகள், கூரை வீடுகள் ஆகியவற்றில் தங்கி வாழ்ந்தனர்.
மனிதன் குடியிருப்புகளை உருவாக்கிக் கூட்டமாக வாழ்ந்தான்.
புதிய கற்கால மனிதனின் ஆபரணங்கள் கிளிஞ்சல்கள் மற்றும் எலும்புத்துண்டுகளினால் செய்யப்பட்டவை.
புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்
புதிய கற்கால மக்கள் நிலையான வாழ்வை மேற்கொண்டனர்.
No comments: