TNPSCடிஎன்பிஎஸ்சி குரூப்தேர்வு என்றால்என்ன? எதற்க்காக இத்தேர்வு நடத்தப்படுகிது ?
TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.
தேர்வாணையம்:
1923 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வுசெய்யும் பொருட்டு ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. லீ பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது.
இந்தியக் குடிமைப்பணி,
இந்தியக் காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின் பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல் துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில் இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த குழு நிர்ணயித்தது.
தங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ் மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தன.
இவ்வகையில் 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டத்தின்படி மதராஸ் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்வாணையம் அமையப்பெற்ற மாகாணம் எனும் தனிப்பெருமையை மதராஸ் மாகாணம் பெற்றது. மதராஸ் தேர்வாணையம் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக்கொண்டு செயல்படத் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப்பின் பல்வேறு தேர்வாணையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1957 ஆம் ஆண்டு மதராஸ் தேர்வாணையம் சென்னையைத்தலைமையிடமாகக்கொண்டு மதராஸ் பணியாளர் தேர்வாணையம் எனப் பெயர் பெற்றது.
1969ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பெயரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என மாற்றம் பெற்றது.
தங்களுடைய இன்றியமையாமை மற்றும் பாரபட்சமின்மை ஆகியவற்றின் விளைவாக அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பினைப் பெற்றுள்ளன. அரசுப்பணியாளர் தேர்வாணையங்களின் பல்வேறு பணிகள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 16, 234, 315 - 323 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் 1954ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறை விதிகள் மற்றும் நடைமுறை விதிகள் ஆகியவற்றால் வழி நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும்
டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காகக் குரூப்-4, குரூப்-3, குரூப்-2, குரூப்-1 எனப் பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கல்வித் தகுதியும் பணி வாய்ப்பும்:
அந்த வகையில், தற்போது குரூப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம், சட்டப்பேரவை செயலகம் ஆகியவற்றில் உதவியாளர்கள், கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கணக்கர் மற்றும் நேர்முக எழுத்தர் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை உதவியாளர் பணிக்குப் பி.எல். பட்டமும், அதேபோல், நிதித்துறையில் உதவியாளர் பணிக்குப் பி.ஏ. பொருளாதாரம் பி.காம். அல்லது புள்ளியியல் பட்டமும் அவசியம். மற்றப் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு போதும்.
என்ன, எப்படிக் கேட்பார்கள்?
எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். குரூப்-2 ஏ பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் (75 வினாக்கள் பொது அறிவு, 25 வினாக்கள் திறனறிதல் (Mental Ability and Aptitude), பொது ஆங்கிலம் அல்லது பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவுப் பகுதியானது, பட்டப் படிப்பில் தரத்தில் அமைந்திருக்கும். திறனறிதல் மற்றும் பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் பகுதிகள் 10-ம் வகுப்பு தரத்திலும் இருக்கும். பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் - இதில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பகுதியைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இது பற்றி விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட்டுவிட வேண்டும்.
தகுதியுள்ள பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி மே 26-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, துறைவாரியான காலியிடங்கள், சம்பள முறை, தேர்வுக்கான பாடத்திட்டம் முதலியவற்றை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. இதர வகுப்பினருக்கு அதாவது, எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., பி.சி. (முஸ்லிம்) வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கணவரை இழந்தவர்களுக்கு (ஓ.சி. வகுப்பு) வயது வரம்பு ஏதும் இல்லை.
BrightZoom
TNPSCடிஎன்பிஎஸ்சி குரூப்தேர்வு என்றால்என்ன? எதற்க்காக இத்தேர்வு நடத்தப்படுகிது ?
Reviewed by Bright Zoom
on
February 14, 2018
Rating:
No comments: