2018 - காவலர் & இரயில்வே தேர்வினை எதிர்கொள்ள சில முக்கிய பாட குறிப்புகள்...!



2018 - காவலர் & இரயில்வே 
தேர்வினை எதிர்கொள்ள சில முக்கிய பாட குறிப்புகள்...!


 உளவியல்

பொதுத்தமிழ் பகுதியில் 
5 முதல் 11வினாக்கள் கேட்கப்படுகிறது. 
இதில் தமிழ்அறிஞர்கள் மற்றும் புலவர்களின் சிறப்பு
பெயர்கள், இயற்பெயர்கள், அறிஞர்களின் கூற்றுகள், புகழ்பெற்ற தொடர்களை
கூறியவர்கள் மற்றும் அவை 
இடம் பெற்ற நூல்கள், இலக்கணக்குறிப்பு, இலக்கணத்தின்
வகைகள் முதலியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

கணிதத்தில் :

4 முதல் 6 வினாக்கள் சில
சமயம் கேட்கப்படுகின்றன. இவற்றில் அளவியல், கூட்டுத்தொகை, பெருக்குத் தொடர், வர்க்கமூலம் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

6 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர்
பாடத்திட்டத்தை நன்றாக படிக்கவும்.
இதிலிருந்து அதிக மதிப்பெண்களை பெறமுடியும்.

 அதிலும் "Book back
question” லிருந்து அதிகமாக
கேட்கப்படுகின்றன.

நடப்பு நிகழ்வுகளிலிருந்து

 5 கேள்விகள் வரை எதிர்பார்க்கலாம். 
விண்வெளி நிகழ்வுகள்,
(தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள்,
விருதுகள், மாநாடுகள், நியமனங்கள், புதிய
கண்டுபிடிப்புகள், விளையாட்டு பற்றிய செய்தியை அறிந்து கொள்ளவும்.

உளவியல்

உளவியல் பொறுத்தவரை
 6 முதல் 10ஆம் வகுப்புகள் வரை கொடுக்கப்பட்டுள்ள வாழ்வியல் கணிதத்தை (மீ.சி.ம, மீ.பொ.வ,
தனிவட்டி, கூட்டுவட்டி, காலமும் வேலையும், வயது கணக்குகள்) முதலில் படித்து வைத்துக்
கொள்வது 10 மதிப்பெண்களை உறுதி  செய்துவிடும்.

பொருளாதாரத்தில் 
பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், ஐந்தாண்டு
திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.

உளவியலில் முக்கிய பகுதிகளான
அளவியல் சூத்திரங்கள், சூழ்நிலை முடிவெடுத்தல், தர்க்க ரீதியிலான கணக்குகள்,
புதிர்கள், ரகசிய மொழிகள், தொடர் எண்கள், தொடர் எழுத்து வரிசைகள், உண்மையை
கண்டறிதல், படங்களை சேர்த்தல்,
வெண்படங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் எத்தனை, உள்ளிட்ட முக்கிய பகுதியில் அடிக்கடி ஒரு கேள்விகள்
வருவதால் அதில் கவனத்துடன் கூடிய பயிற்சியும் முக்கியம்.

கடந்தாண்டு வினாத்தாளில்
கேட்கப்பட்டுள்ள மாதிரி  வினா விடைகளை மீண்டும்
மீண்டும் பயிற்சி செய்தால் உளவியலில் முழுமையான மதிப்பெண்கள் கிடைத்து விடும்.

தேர்வில் வெற்றி பெற 
வாழ்த்துக்கள்.
Bright Zoom


2018 - காவலர் & இரயில்வே தேர்வினை எதிர்கொள்ள சில முக்கிய பாட குறிப்புகள்...! 2018 - காவலர் & இரயில்வே  தேர்வினை எதிர்கொள்ள சில முக்கிய பாட குறிப்புகள்...! Reviewed by Bright Zoom on March 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.