கடற்பாலூட்டி (Cetacea) திமிங்கலம் பற்றி இந்த தகவல்கள் தெரியுமா?

கடற்பாலூட்டி (Cetacea)
திமிங்கலம் பற்றி இந்த தகவல்கள் தெரியுமா?




கடலுக்குள்ளேயே உலவும் பிரம்மாண்டமான உயிரினம் நீலத்திமிங்கலம்.

2 பேருந்து அளவுக்கு நீளம் கொண்ட திமிங்கலத்தின் எடை 120 டன் ஆகும், அதாவது 24 யானைகளின் எடைக்கும் சமம்.

80 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை, இதன் குட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு 5 கிலோ எடை அதிகரித்து வளரும்.

இதன் தோலின் உட்புறம் உள்ள கொழுப்பு அடுக்கு, உடலில் வெப்பத்தை தக்கவைக்க உதவுகிறது.



மேலும் கடல் நீரின் அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு உடல் அமைப்பு உள்ளது.

கடலின் மேற்பகுதிக்கு வந்து சுவாசித்துவிட்டு கடலுக்குள் சென்று வெகுநேரம் மூச்சை அடக்கித் தாக்கு பிடிக்கும் வல்லமை கொண்டது.

ஒலி எழுப்புவதன் மூலம் மற்ற திமிங்கலங்களுடன் தொடர்பு கொள்ளும்.

மனிதர்களை போன்றே நான்கு அறைகள் கொண்ட இதயம் இருக்கிறது, சராசரியாக 600 கிலோ எடையில் ஒரு சிறிய காரின் அளவு இருக்கும்.

இவற்றில்அறிவியல்

கடற்பாலூட்டி (Cetacea) என்பது,திமிங்கிலங்கள், கடற்பசுக்கள்,கடற்பன்றிகள் போன்ற பாலூட்டிவகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின வகையைச் சேர்ந்த ஒரு விலங்கைக்குறிக்கும். தொடக்கத்தில் திமிங்கிலத்தைக் குறித்ததும், பின்னர் பெரிய கடல்வாழ் விலங்குகளைப் பொதுவாகக் குறிப்பதுமான சீட்டேசியேஎன்னும் இலத்தீன் சொல் இவற்றில்அறிவியல் பெயர்களில்பயன்படுகின்றது.

கடற்பாலூட்டிகள், நீர் வாழ்வுக்குஇசைவாக்கம் பெற்ற பாலூட்டிகள் ஆகும். இவை இருமுனையும் கூம்பிய உடலமைப்புக் கொண்டவை. முன் கால்கள் நீந்துவதற்கு ஏற்ற வகையில்துடுப்புக்கள் போல் மாற்றம் பெற்றுள்ளன. பின்னங் கால்கள் குறுகி உறுப்பெச்சங்களாகக் காணப்படும். இக் கால்கள் முதுகெலும்புடன் இணைக்கப்படாமல் உடலுக்குள்ளேயே காணப்படுகின்றன. இவற்றில் உடலில் பெரும்பாலும் உரோமங்கள் இருப்பதில்லை. ஆனால், இவற்றில் உடல் தடிப்பான தோலயற்கொழுப்புப்படையினால் காக்கப்படுகின்றது. இவ்விலங்குகள் பொதுவாகப்புத்திக்கூர்மை கொண்டவை எனக் கருதப்படுகின்றன.

சீட்டேசியே (Cetacea) வரிசையில் 90இனங்கள் உள்ளன. இவற்றுள் நான்கு நன்னீர்க் கடற்பசு இனங்கள் தவிர ஏனையவை கடல் வாழ்வன. இவை, சிறிய கடற்பசுக்கள் முதல் எக்காலத்தும் உலகில் வாழ்ந்த விலங்குகளுள் மிகப் பெரியனவாகக் கருதப்படும் நீலத் திமிங்கிலங்கள் வரை வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன.

கடற்பாலூட்டிகளின் உடலானது மீன்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு அவற்றின் வாழ்க்கை மற்றும் வாழ்விட நிலைமைகள் காரணமாக இருக்கலாம். கடற்பாலுட்களின் உடலானது வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவைமைப்பைப் பெற்றுள்ளன. மேலும் யூத்தேரியா போன்ற மற்ற உயர் பாலுட்டிகளின் பண்புகளையும் கொண்டுள்ளன. 

நீரில் நீந்துவதற்கு ஏற்றவாறு கடற்பாலூட்டிகளின் முன்கைகள் வால்துடுப்புகள் மாற்றமடைந்துள்ளன. முதுகுப்புறத்தில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பு காணப்படுகிறது. கடற்பாலுட்டி இனங்களைப் பொறுத்து இதன் வடிவம் மாறுபடக்கூடும். பெலுகா திமிங்கலத்தில் இத்தகைய அமைப்பு காணப்படுவதில்லை. வால்துடுப்பு மற்றும் மேல் துடுப்பு இரண்டும் நீரில் நிலையாக நீந்திச் செல்வதற்கு ஏற்றாற் போல் அமைந்துள்ளது.

கடற்பாலூட்டிகளின் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் பெண்ணின் பால் சுரப்பிகள் உடலுக்குள் மறைந்து காணப்படுகிறது. 

கடற்பாலூட்டியின் தோல் தோலயற்கொழுப்பு (blubber) என்ற ஒரு தடித்த அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இது வெப்ப காப்பு அமைப்பாக பயன்படுகிறது மேலும் மென்மையான சீரான உடல் வடிவம் கொண்டதாகக் காணப்படுகிறது. பெரிய இனங்களில் இந்த கொழுப்பு அடுக்கானது அரை மீட்டர் வரை தடிமனைக் கொண்டிருக்கும். (1.6 அடி)

பற்களுடைய திமிங்கலங்களில் பால் ஈருருமை தோன்றியுள்ளது. ஆண் உயிரணு திமிங்கலம், அலகுடைய பல திமிங்கல குடும்ப வகைகள், கடற்பன்றி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு இனங்கள், கொல்லும் திமிங்கலங்கள், பைலட் திமிங்கலங்கள், கிழக்குச் சுழல் டால்பின்கள் ஆகியவற்றில் இப்பண்பு காணப்படுகிறது. 

ஆண் விலங்குகளுக்கு மற்ற ஆண்களிடையே போட்டியிடுவதற்காக வெளியே தெரியும் படியான பண்புகள் காணப்படுகின்றன.

 அவைபெண்களில்காணப்படு
வதில்லை. உதாரணமாக, ஆண் உயிரணு திமிங்கலங்கள் பெண் திமிங்கலத்தை விட 63% பெரியதாக உள்ளது. பல அலகுடைய திமிங்கலங்கள் ஆண்களுடன் போட்டியிடும் போது தங்களின் அலகுகளை காண்பித்து பலத்தை வெளிப்படுத்துகின்றன. 

Bright Zoom




கடற்பாலூட்டி (Cetacea) திமிங்கலம் பற்றி இந்த தகவல்கள் தெரியுமா? கடற்பாலூட்டி (Cetacea) திமிங்கலம் பற்றி இந்த தகவல்கள் தெரியுமா? Reviewed by Bright Zoom on March 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.