உலக வரலாற்றில் இன்று(21-03-2018)
உலக காடுகள் தினம் :
காடுகளை பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்!
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியை உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலக பொம்மலாட்ட தினம்:
உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
நா.மகாலிங்கம்:
ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.
இவர் தந்தை வழி தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.
சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்யத்தை தனது உழைப்பால் விரிவுபடுத்தினார்.
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962-ல் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்மபூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த 'அருட்செல்வர்" என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தனது 91வது வயதில் (2014) காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.
1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை 'பாரத் ரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார்.
1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.
1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1556 – கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1788 – லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
1800 – ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.
1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
1844 – பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.
1857 – டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.
1913 – ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1933 – டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.
1935 – பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர்.
1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் எனடாக்காவில் வைத்து அறிவித்தார்.
1960 – நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.
1980 – ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகாலஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்அறிவித்தார்.
1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
1994 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler’s List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
1998 – புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது.
இறப்புகள்:
543 -நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480)
1556 -தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489)
1847 -மேரி அன்னிங், பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1799)
1998 -இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1914)
2008 -க. சச்சிதானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1921)
2012 -யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1946)
2013 -சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1930)
2016 -பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1928
பிறப்புகள்:
1768 -ஜோசப் ஃபூரியே, பிரான்சிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1830)
1807 -சைமன் காசிச்செட்டி, தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860)
1866 -அந்தோனியா மோரி, அமெரிக்க வானியலாளர் (இ. 1952)
1867 -பாண்டித்துரைத் தேவர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1911)
1887 -எம். என். ராய், இந்திய அரசியல்வாதி (இ. 1954)
1915 -ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 2004)
1916 -பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2006)
1923 -பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
1927 -ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (இ. 2013)
1930 -கா. செ. நடராசா இலங்கை எழுத்தாளர், கவிஞர், தமிழறிஞர் (இ. 2006)
1936 -காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)
1939 -அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2016)
1946 -திமோதி டால்டன், உவெல்சு-ஆங்கிலேய நடிகர்
1958 -கேரி ஓல்ட்மன், ஆங்கிலேய நடிகர்
1966 -ஷோபனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1978 -ராணி முகர்ஜி, இந்திய திரைப்பட நடிகை
1980 -ரொனால்டினோ, பிரேசில் காற்பந்து வீரர்
1991 -அந்துவான் கிரீசுமன், பிரான்சியக் காற்பந்து வீரர்
சிறப்பு நாள்:
மர நாள் (போர்த்துகல், லெசோத்தோ)
இணக்க நாள் (ஆத்திரேலியா)
மனித உரிமைகள் நாள் (தென்னாப்பிரிக்கா)
விடுதலை நாள் (நமீபியா, 1990)
பன்னாட்டு வண்ண நாள்
அன்னையர் நாள் (அரபு நாடுகள்)
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்
உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்
சர்வதேச நவ்ரூஸ் நாள்
சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
March 21, 2018
Rating:
No comments: