உலக வரலாற்றில்
இன்று மார்ச் 28 - நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்...!
'தேசியக் குயில்"
என போற்றப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அலமேலு.
இவர் நான்கு வயது முதல் பாடத் தொடங்கினார். இவருடைய தந்தை இவரை மேடையேற்ற தயங்கினார். பட்டம்மாளின் பள்ளி தலைமை ஆசிரியர் இவரது திறனை உணர்ந்து, தந்தையின் அனுமதியை பெற்றுத் தந்தார்.
காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். முதன்முறையாக வானொலியில் 1929-ல் பாடினார். இவருடைய முதல் கச்சேரி 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேறியது.
நாடு விடுதலை அடைந்த இரவு முழுவதும் 'விடுதலை, விடுதலை", 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே" போன்ற தேசபக்தி பாடல்களையும், காந்தியடிகள் மறைந்தபோதும் அகில இந்திய வானொலியில் பாடினார்.
முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடல்களைப் பாடுவதில் இவர் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். 'தியாக பூமி" (1939) படத்தில் முதன்முதலாக 'தேச சேவை செய்ய வாரீர்" என்ற பாடலை பாடினார்.
பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மன் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 90வது வயதில் (2009) மறைந்தார்.
சத்தியமூர்த்தி:
இன்று இவரின் 75வது நினைவு தினம்...!!
விடுதலைப் போராட்ட வீரர்
சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். மேலும் சமூக சீர்திருத்த சிந்தனைமிக்கவர்.
1930-ல் சென்னை பார்த்தசாரதி கோவிலில், தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் எப்போதோ ஓடியிருப்பார்கள் என்றார் காந்தியடிகள்.
சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு தனது 56வது வயதில் (1943) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1868ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளரும், அரசியல்வாதியுமான மாக்சிம் கார்க்கி (ஆயஒiஅ புழசமல) ரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தார்.
2006ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணியாற்றி வந்த வேதாத்திரி மகரிஷி மறைந்தார்.
193 – ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.
845 – ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
1802 – ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது.
1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1939 – ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.
1979 ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
2005 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்:
1862 – அரிஸ்டைட் பிறயண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1932)
1868 – மாக்சிம் கார்க்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1936)
1892 – கோர்னெயில் ஹைமான்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968
1930 – ஜெரோமி பிரீட்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1982 – சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புக்கள்:
1943 – எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
1982 – வில்லியம் ஜியோக், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1895)
2006 – வேதாத்திரி மகரிஷி, தத்துவஞானி (பி. 1911)
சிறப்பு நாள்:
சிலோவேக்கியா, செக் குடியரசு – ஆசிரியர் நாள்

உலக வரலாற்றில் இன்று மார்ச் 28
Reviewed by Bright Zoom
on
March 28, 2018
Rating:
No comments: