உலக வரலாற்றில் இன்று-(30.03.2018)
ஆனந்தரங்கம் பிள்ளை:
நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார்.
இவர் பல தொழில்களை செய்து வந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். பல மொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.
முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், ஜமீன்தாரராகவும் நியமிக்கப்பட்டார்.
ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீக படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்று பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
மக்கள்பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன.
உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸ் என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளையை இவருடன் ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்" என போற்றப்பட்டார்.
நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் தனது 51வது வயதில் (1761) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
1853ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவிய மேதை வின்சென்ட் வான் கோ
நெதர்லாந்தில் பிறந்தார்.
1842ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி அறுவை சிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து க்ராஃபோர்டு லாங்
என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1858ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரால் பெறப்பட்டது.
1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1814 – நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர்.
1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842 – அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
1867 – அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்பற்றினர்.
1949 – ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது.
1965 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.
பிறப்புகள்:
1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)
1925 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (இ. 2014)
இறப்புக்கள்:
1949 – பிரீட்ரிக் பேர்ஜியஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1884)
1965 – பிலிப் ஹென்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1896)
2005 – ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)
Bright Zoom.
உலக வரலாற்றில் இன்று-(30.03.2018)
Reviewed by Bright Zoom
on
March 30, 2018
Rating:
No comments: