பொது அறிவு-வரலாறு சமணமதம்

பொது அறிவு-வரலாறு 
சமணமதம்




சமணமதம் கி.மு.6ஆம் நூற்றாண்டு உலகின் சிந்தனைப் புரட்சிகாலம் ஆகும். அக்காலத்தில் இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும் தோன்றின.

இவ்விரு மதங்களும் சமய, சமூகச் சீர்திருத்த இயக்கங்களாக உருவெடுத்தன. 

இவை மூடநம்பிக்கைகள், தேவையற்ற சமயச் சடங்குகள் மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதை நோக்கங்களாகக் கொண்டிருந்தன.

சமண மதத்தை உருவாக்கியவர்கள் வர்த்தமான மகாவீரர். 

பௌத்த சமயக் கருத்துகளை வழங்கியவர் கௌதமபுத்தர். 

சமணம் :

சமண சமயத்தினரால் 24 தீர்த்தங்கரர்கள் வழிபடப்படுகின்றனர். முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிபவேதர் ஆவார்.

 இவ்வரிசையில் இறுதியாக 24 ஆவதாக வந்தவர் வர்த்தமான மகாவீரர்ஆவார்.

 இவர் சமண சமயத்திற்கு உறுதியான ஓர் அமைப்பைத் தந்தார்.

வர்த்தமான மகாவீரரின் காலம் கி.மு.534 முதல் கி.மு.462 வரையாகும்.

 இவர் இன்றைய பீகார் மாநிலத்தில், வைசாலி நகருக்கு அருகில் உள்ள குந்தக் கிராமம் என்னும் ஊரில் பிறந்தவர்.


இவரது தந்தை பெயர் சித்தார்த்தர் தாயின் பெயர் திரிசலை. இவருக்கு யசோதா என்ற மனைவியும், அனோஜ பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.

இவர் தனது 30ஆம் வயதில் இல்வாழ்க்கையைப் புறந்தள்ளி முற்றிலும் ஒதுக்கிவிட்டுத் துறவியானார். 

அன்றையக் காலக்கட்டதில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு விடைதேடி 12 ஆண்டுகள் கடுமையான தியானத்தில் ஆழ்ந்தார்.

தம் வாழ்க்கையில் இன்பங்களையும், துன்பங்களையும் சமமாகப் பாவிக்கத் தொடங்கினார். உண்மையைத் தேடி வெற்றியும் கண்டார். 

இதன் காரணமாக வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.

 மக்கள் அவரை மகாவீரர் என்றும் அழைத்தனர். இவ்வாறு, தான்கண்ட உண்மைகளை ஊர்ஊராகச் சென்று 30 ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார்.


மனிதர்களின் துயத்திற்கு மனிதர்கள்தான் காரணம். மனிதர்களால் பிற உயிர்களுக்குக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்றார்.

 இதற்காகக் கட்டுபாடுகளுடன் கூடிய வாழ்க்கை முறையை போதித்தார்.

சமண சமயம் உயிரிரக்கம் எனப்படும் அகிம்சையை பின்பற்றுவதை வலியுறுத்தியது. 

ஆடைகள் அணிவதையும் போரிடுவதையும், வேளாண் செய்வதையும் தவிர்த்தனர்.

உயிர்களை எதன் பொருட்டும் கொல்லக்கூடாது என்பதே இச்சமயத்தின் அடிப்படை கோட்பாடாகும். 

வணிகமே சமணர்களின் முக்கியத் தொழில்.

வர்த்தமானர் போதித்த அறிவு போதனைகள் 

நல்லறிவு
நன்னம்பிக்கை
நன்னடத்தை

ஐந்து ஒழுக்கங்கள்

ஊறு செய்யாமை
பொய்யாமை
களவாமை
உடைமை மறுத்தல்
புலனடக்கம்

சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் 

சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் 

சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணக் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
சூடாமணி

இலக்கண இலக்கிய படைப்புகள்

யாப்பருங்கலங்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது மற்றும் நிகண்டுகள் போன்றவைகள் சமண கால படைப்புகளாகும்.

சமணக் கட்டடக் கலை 

இராஜஸ்தான் - மவுண்ட் அபு - தில்வாரா கோயில்.

கஜீராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில்கள் 

சிற்பங்கள்

உதயகிரி
ஹதிகும்பா
கிர்னார்
சிரவணபெலகொலா
கழுகு மலை
கோமதீஸ்வரர் சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சிவரணப்பெலகொலாவில் உள்ளது.


வரலாறு - சமண மதம் வினா விடை.

1. உலகின் சிந்தனைப் புரட்சிகாலம் எனப்படுவது எது? - கி.மு.6ஆம் நூற்றாண்டு

2. சமண மதத்தை உருவாக்கியவர் யார்? - மகாவீரர்

3. முதல் தீர்த்தங்கரர் எனப்படுபவர் யார்? - ஆதிநாதர் எனப்படும் ரிஷபவேதர்

4. மகாவீரர் பிறந்த ஊர் எது? - பீகார் (குந்தக் கிராமம்)

5. வர்த்தமான மகாவீரரின் பெற்றோர் - சித்தார்த்தர்-திரிசலை

6. வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? - மகாவீரர்

7. மகாவீரர் ஊர் ஊராகச் சென்று எத்தனை ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். - 30

8. வர்த்தமானர் போதித்த மும்மணிகள் எவை? - நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை

9. சமணர்களின் முக்கியத் தொழில் எது? - வணிகம்

10. சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் யாவர்? - சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்

11. சமணர்களின் இலக்கணக் காப்பியங்கள் எவை? - சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, சூடாமணி

12. புகழ்வாய்ந்த கோமதீஸ்வரர் சிற்பம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - கர்நாடகம் (சிரவணபெலகொலா)




இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு

வரலாறு - பௌத்த மதம் - பகுதி-2

1. பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் யார்? - அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்

2. நமது தேசிய கொடியில் காணப்படும் 24 ஆரங்களைக்கொண்ட சக்கரம் ............... - அசோகரின் தர்மசக்கரம்

3. பௌத்தத் துறவிகளின் விகாரங்கள் (மடங்கள்) மிகுந்த மாநிலம் எது? - பீகார்

4. பௌத்தத் துறவிகளின் அமைப்பு ............. எனப்பட்டது. - சங்கம்

5. புத்த சமயத்தின் இரு பிரிவுகள் எவை? - ஹீனயானம், மஹhயானம்

6. இன்றளவும் பௌத்தசமயம் பின்பற்றப்படும் நாடுகள் எவை? - இலங்கை, பர்மா, திபெத், சீனா, ஜப்பான், தாய்லாந்து

7. பௌத்த சமய வரலாற்றை பெரிதும் விளக்குவது .................. - ஜாதகக் கதைகள்

8. புத்தர் காலத்தின் பல படைப்புகள் எங்கு காணப்படுகிறன? - கயா, சாஞ்சி, பர்கட்

9. அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும் எவரின் சிறப்பை விவரிக்கின்றன? - புத்தர்

10. காந்தாரக் கலைச் சிற்பங்கள் எந்த சமயத்தை சார்ந்தவை? - புத்த சமயம்

11. பௌத்த சமயத் துறவிகளின் பிரார்த்தனைக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சைத்தியங்கள்

12. அஜந்தா குகை ஓவியங்கள், எல்லோரா சிற்பங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - மகாராஷ்டிரம் (ஒளரங்காபாத்) 



பொது அறிவு-வரலாறு சமணமதம் பொது அறிவு-வரலாறு  சமணமதம் Reviewed by Bright Zoom on March 31, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.