உலக வரலாற்றில் இன்று(24-03-2018) இன்று உலக காசநோய் தினம் : (Today World TB Day)

உலக வரலாற்றில் இன்று(24-03-2018)




இன்று உலக காசநோய் தினம் :
(Today World TB Day)

 இந்நோயை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்!

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை
மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் 


பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமிரோ(Archbishop Oscar Arnulfo Romero)
  அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி போராடினார்.

இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூற இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. 

உலக காசநோய் தினம்:



காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். 

 காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

முத்துசுவாமி தீட்சிதர்:


 இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1775ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார்.

 சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார்.

இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். இவரது பாடல்களில் குருகு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். 

 பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியுள்ளார். வறட்சி நிலவிய கிராமத்தில் அமிர்தவர்ஷினி ராகத்தில் கீர்த்தனை பாடி மழையை வரவழைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.

 அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் (1835) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

 1988ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் மறைந்தார்.

1922ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்தார்.

1878 – பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1882 – காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

1923 – கிறீஸ் குடியரசாகியது.

1944 – ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.

1947 – மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

1965 – டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.

1972 – ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.

1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.

1999 – கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.

1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்:

1776 – முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)

1874 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க நடிகர் (இ. 1926)

1884 – பீட்டர் டெபாய், டச்சு-அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1966)

1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், செருமானிய வேதியியலாலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)

1923 – டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர்

1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்

1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல்வாதி, 13வது பிரதமர்

1956 – இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்

1965 – தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர்

1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்

1979 – கிரீம் ஸ்வான், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1984 – கிரிஸ் பாஷ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1987 – சகீப் அல் அசன், வங்க தேசத் துடுப்பாளர்

1988 – ரயான் ஹிக்கின்ஸ், சிம்பாப்வே துடுப்பாளர்

இறப்புக்கள்:

1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)

1905 – ழூல் வேர்ண், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1828)

1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)

சிறப்பு நாள்

அனைத்துலக காச நோய் நாள்

Bright Zoom




உலக வரலாற்றில் இன்று(24-03-2018) இன்று உலக காசநோய் தினம் : (Today World TB Day) உலக வரலாற்றில் இன்று(24-03-2018)      இன்று உலக காசநோய் தினம் : (Today World TB Day) Reviewed by Bright Zoom on March 24, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.