இரயில்வே தேர்வு - 2018 : பொது அறிவு உயிரியல் - பற்களின் வகைகள்:
➤ நம் வாழ்நாளில் நமக்கு இரண்டு வகையான பற்கள் தோன்றுகின்றன.
➤ ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தோன்றும் பற்கள் முதல்வகை.
➤ இதற்குப் பால்பற்கள் என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை 20 ஆக இருக்கும்.
➤ இப்பால்பற்கள் குழந்தையின் ஏழு அல்லது எட்டு வயது வரை மட்டுமே இருக்கும்.
➤ பால்பற்கள் விழுந்தவுடன், புதிய வகைப் பற்கள் வளர்கின்றன. இப்பற்களுக்கு நிலைத்த பற்கள் என்று பெயர்.
➤ இவற்றின் எண்ணிக்கை 32ஆக இருக்கும்.
➤ இப்பற்களில் 16 மேற்புறத்தாடையிலும், 16 கீழ்ப்புறத்தாடையிலும் உள்ளன.
➤ அனைத்துப்பற்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
➤ இவை நான்கு வகைப்படும். முறையே வெட்டுப்பற்கள், கோரைப்பற்கள், முன், பின் கடைவாய்ப் பற்கள் ஆகும்.
வெட்டுப்பற்கள் :
➤ வாயின் முன்பகுதியில் உளிபோன்று காணப்படும் பற்கள் வெட்டுப் பற்களாகும்
➤ .ஒவ்வொரு தாடையிலும் நான்கு பற்கள் வீதமாக மொத்தம் எட்டுப் பற்கள் உள்ளன. இவை உணவைக் கடிப்பதற்கு உதவுகின்றன.
கோரைப் பற்கள் :
➤ இவை கூரிய முனையுள்ள பற்கள். ஒவ்வொரு தாடையிலும் இரண்டு பற்கள் வீதம் மொத்தம் நான்கு பற்கள் உள்ளன. இவை உணவை வெட்டவும் கிழிக்கவும் உதவுகின்றன.
முன்கடைவாய்ப் பற்கள்:
➤ ஒவ்வொரு தாடையிலும் கோரைப் பற்களுக்குப் பின் காணப்படும் பெரிய பற்களே முன் கடைவாய்ப் பற்கள்.
➤ இவை அகன்ற பரப்பு உடையவை. ஒவ்வொரு தாடையிலும் நான்கு பற்கள் வீதம் மொத்தம் எட்டுப் பற்கள் உள்ளன.
➤ இவை உணவை மெல்லவும், அரைக்கவும் பயன்படுகின்றன.
பின்கடைவாய்ப் பற்கள் :
➤ முன்கடைவாய்ப் பற்களுக்குப் பின் காணப்படும் பெரிய பற்களே பின் கடைவாய்ப் பற்கள் ஆகும்.
➤ முன்கடைவாய்ப் பற்களைவிட அகன்ற பரப்புடையவை.
➤ இவை முன்கடைவாய்ப் பற்கள் போன்றே உணவை மெல்லுவதற்கும் அரைக்கவும் பயன்படுகின்றன.
➤ ஒவ்வொரு தாடையிலும் ஆறு பற்கள் வீதம் மொத்தம் பன்னிரண்டு பின் கடைவாய்ப்பற்கள் உள்ளன.
பல் பராமரிப்பு :
➤ நிலைத்த பற்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுகின்றன. இவை விழுந்தால் மீண்டும் முளைப்பதில்லை.
➤ எனவே, அதிக அக்கறையுடன் பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
➤ பற்களில் உள்ள பற்பூச்சு (எனாமல்) பெரியவர்களைவிடச் சிறுவர்களுக்கு மெல்லியதாகக் காணப்படும்.
➤ எனவே, பெரியவர்களைவிடச் சிறியவர்களுக்கு பற்கள் எளிதில் சிதையக்கூடியதாகக் காணப்படும்.
➤ சிறுவர்கள் அதிக குளிரான அல்லது வெப்பமான உணவைத் தவிர்த்தல் வேண்டும்.
➤ ஒரு நாளில் பற்களை இருமுறை துலக்குதல் வேண்டும்.
➤ செங்கல்தூள் போன்ற கடினமான பொருள்களைக் கொண்டு பற்களைத் தேய்த்தல் கூடாது.
➤ மற்ற விலங்குகளில் உள்ள பற்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் காணலாம்.
➤ பறவைகளுக்குப் பற்கள் கிடையாது.
➤ எலிகளுக்குப் பற்கள் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.
➤ சில மனிதர்களுக்கு மட்டுமே 32 பற்கள் இருக்கும்.
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
March 23, 2018
Rating:
No comments: