உலக வரலாற்றில்இன்று (27.03.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள் :

உலக வரலாற்றில்இன்று  (27.03.2018)
நடந்த முக்கிய நிகழ்வுகள் :




உலக திரையரங்க தினம:

ஒவ்வொரு ஆண்டும் உலக திரையரங்க தினம் மார்ச் 27ஆம் தேதி சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

 யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. 


வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன்:
(Wilhelm Conrad Rontgen)



எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் 1845ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் பிறந்தார்.

இவர் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் செய்தார். அப்பொழுது வெற்றிடக்குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் ஒளிர்வதை கண்டார். 

மேலும், இவர் இருட்டு அறையில், சில சோதனைகளை செய்து பார்த்தப்போது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். 

இதை அவர் நவம்பர் 8, 1895ஆம் ஆண்டு கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை என போற்றப்படும் இவர் தன்னுடைய 77வது வயதில் (1923) மறைந்தார். 


முக்கிய நிகழ்வுகள்:


1513ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை (புளோரிடா) கண்டுபிடித்தார்.


1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.

1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர்.

1890 – கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.

1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர்.
 ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் கொல்லப்பட்டனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.

1980 – நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1998 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.

1994 – அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.

2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.

2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்:

347 – ஜெரோம், உரோமை ஆயர், இறையியலாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 420)

1892 – சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதிய ஈழத்து எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947)

1948 – எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர்

1985 – ராம் சரண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்:

1898 – சையது அகமது கான், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி (பி. 1817)

2005 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)

சிறப்பு நாள்:

உலக நாடக அரங்க நாள்

ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.




உலக வரலாற்றில்இன்று (27.03.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள் : உலக வரலாற்றில்இன்று  (27.03.2018) நடந்த முக்கிய நிகழ்வுகள் : Reviewed by Bright Zoom on March 27, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.