1857-ல் நடைப்பெற்ற சிப்பாய் கலகத்திற்கு வேலூர் புரட்சி ஒரு முன்னோடியாக திகழ்ந்தது .
வேலூர் புரட்சி
ஆங்கில ஏகாதிபத்தியம் சட்டரீதியாக இந்தியாவில் வேரூன்றிய பின் நடைபெற்ற முதல் பெரும் புரட்சியாகும்.
சென்னை மாநில சிப்பாய்களுக்கு ஒருவகையான புதிய தலைப்பாகை அணிவதற்கான ஆணை 1805 நவம்பர் 14-ல் பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் மார்பில் சிலுவையை போன்ற ஒரு பொருளை தொங்க விட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
இவைதவிர இந்திய் வீரர்கள பயிற்சிக்கு வரும்போது தங்கள் காதுகளில் கடுக்கண்அணியக்கூடாது என்றும், நெற்றியில் திருநீறு இடக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.
இத்தகைய உத்தரவுகளால் மனகசப்புற்ற இந்திய் வீரர்கள் புரட்சியில் ஈடுப்பட எத்தனித்தனர்.
படைத்தளபதியின் புதிய ஆணையின்படி 1806 ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களில் புதிய தொப்பிகள் வேலூர் படைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டன.
இதை அணிய மறுத்த வீரர்களுக்கு சாட்டையடி தண்டனை வழங்கப்பட்டது.
புரட்சியில் ஈடுப்பட்ட வேலூர் படைப்பிரிவை கலைத்துவிட்டு புதிய படைப்பிரிவை கம்பெனி அமைத்தது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய் வீரர்கள் புரட்சி உணர்வில் மேலோங்கி ஒற்றுமையுடன் செயல்ப்பட துணிந்தனர்.
இத்தகைய புரட்சியாளர்களுக்கும் வேலூர் கோட்டையில் சிறையில் இருந்த திப்பு சுல்தான் வாரிசுகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
உத்வேகமடைந்த புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து1806 ஜூலை 10 ல் புரட்சியை தொடங்கினர்.
புரட்சியாளர்கள் அன்றே கோட்டையை கைப்பற்றினர். திப்பு சுல்தானின் புலிக்கொடி கோட்டையின் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
மேஜர் கோட்ஸ், கர்னல் கில்லஸ்பி ஆகிய ஆங்கிலேயர்களின் படைகளின் மூலம் கிளர்ச்சி அன்றே காலை 10 மணி அளவில் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது.
கிளர்ச்சியாளர்களில் சுமார் 3000வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வேலூர் புரட்சி
Reviewed by Bright Zoom
on
March 01, 2018
Rating:
No comments: