TNPSC குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - 4 (குரூப்-4) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒன்றிணைத்து தேர்வை நடத்துகிறது.
பணியிடங்கள்
1. கிராம நிர்வாக அலுவலர்
2. இளநிலை உதவியாளர் (அல்லாத பாதுகாப்பு)
3. இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு)
4. பில் கலெக்டர், கிரேடு -1
5. புலம் சர்வேயர்
6. வரைவு பணிப்பாளர்
7. தட்டச்சு.
8. ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (தரம் III)
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியான எவரும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
2. குரூப் - 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தேர்வுகள், தனித்தனியாக நடத்தப்பட்டுவந்தன.
3. தற்போது இந்த இரு தேர்வுகளும் இணைக்கப்பட்டதால், கிராம நிர்வாகம் பற்றிய பகுதி படிக்கத் தேவையில்லை.
4. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் 13 முதல் 15 லட்சம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
5. இந்தத் தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஹெச்.டி படித்தவர்கள் வரை பல்வேறு கலை, அறிவியல், தொழிற்படிப்பு படித்தவர்கள் அதிக அளவில் விண்ணப்பிப்பதால், போட்டி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
6. இதனால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் மிக அதிகமாகப் பெறவேண்டும்.
• எந்தப் போட்டித்தேர்வுக்குத் தயார்செய்தாலும் அதற்கான பாடத்திட்டம், முந்திய கேள்வித்தாள்கள், புத்தகங்கள் இவற்றில் தெளிவாக இருக்க வேண்டும்.
• TNPSC தேர்வின் அறிவிப்பிலேயே பாடத்திட்டம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
• இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
பொதுத்தமிழ் / ஆங்கிலம் - 100 கேள்விகள்,
பொது அறிவு - 100 கேள்விகள் கேட்கப்படும்.
• ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படுகிறது.
• பெரும்பாலான கேள்விகள் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால், பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
• பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிப் பாடத்திட்டப் புத்தகங்களே முதன்மையான புத்தகங்களாகும்.
• எந்த ஒரு போட்டித்தேர்வுக்கும், முந்தைய கேள்வித்தாள்களைப் போன்று வேறு யாரும் வழிகாட்ட முடியாது.
• 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், எந்தெந்தப் பாடப் பிரிவுகளிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது
• என்பதைப் பார்த்து, இந்த ஆண்டு தேர்வுக்குத் தங்களின் தேர்வுத் தயாரிப்பு முறை நிர்ணயிக்கலாம்.
கடந்த தேர்வுகளில் பாடவாரியான கேள்விகள் 2014 2016
பொதுத்தமிழ் / ஆங்கிலம் 100 100
கணிதம் 25 25
வரலாறு 16 16
புவியியல் 8 6
இந்திய அரசியலமைப்பு 3 8
பொருளாதாரம் 6 9
இயற்பியல் 4 4
வேதியியல் 3 3
உயிரியல் - தாவரவியல் 3 2
உயிரியல் - விலங்கியல் 6 6
நடப்பு நிகழ்வுகள் 10 18
அரசின் திட்டங்கள் 6 3
புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது.
பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்குமேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன.
எனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Bright Zoom
TNPSC குரூப்-4 தேர்வு
Reviewed by Bright Zoom
on
March 01, 2018
Rating:
No comments: