இந்திய தேசியச் சின்னங்கள் பாெது அறிவு தகவள்கள்...!

இந்திய தேசியச் சின்னங்கள் பாெது அறிவு தகவள்கள்...!


இந்தியாவின் தேசிய சின்னம் சாரதாத்தில் உள்ள அசோகத் தூண்ணில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரம் ஆகும். 

இதில் நான்கு முகச் சிங்கமும்,
சீறிப்பாயும் குதிரைகளும், காளையும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள்கொண்ட "சத்ய மேவ ஜெயதே" என்ற
வார்த்தைகள் கொண்ட எழுத்துக்கள் தேவநாகரி மொழியில் பொறிக்கப் பட்டுள்ளன.

இத்தேசிய சின்னத்தினை அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல
வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். 

மக்களவை உறுப்பினர்கள் பச்சை
வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.

தேசியக் கொடி

 காவி, பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய
மூவர்ணக் கொடி யே இந்தியாவின் தேசியக் கொடி ஆகும். 

வெண் பட்டையின்
நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக
சக்கரம் ஒன்று உள்ளது.

மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த
கருத்துடன் அங்கிகரித்தது.
தேசியப் பாடல்

தேசியப் பாடல்:

இந்தியாவின் தேசியப் பாடல் வந்தே மாதரம் ஆகும்.

இதனை பக்கிம் சந்திர சாட்டர்ஜி
என்பவர் வங்காள மொழியில் எழுதினார். 

1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 
இது முதன்முதலாக பாடப்பட்டது.

 இப்பாடல் இந்தியாவின் தேசியப்
பாடலாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனை இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

தேசிய நாட்காட்டி:

இந்தியாவின் தேசிய நாட்காட்டி சக வருட நாட்காட்டி ஆகும். 

சக வருட நாட்காட்டி 1957.
ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சக ஆண்டு
"இந்தியா கெசட்டு', 'ஆல் இந்தியா ரேடியோ', 'தேசிய நாட்குறிப்பு' முதலியவற்றில்
உபயோகிக்கப்படுகிறது.

தேசிய கீதம்:

இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கண மன" பாடல் ஆகும். 

இது 1912ல் தாகூரின்
"தத்துவ போதினி" பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.

இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் இப் பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 

1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய
காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும்.


தேசிய விலங்கு:

இந்தியாவின் தேசிய விலங்கு புலி ஆகும். 

2001 ல் புலிகளின் எண்ணிக்கை
3642 ஆக இருந்தது. ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 

1973ல்தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான புலிகள் பாதுகாப்புத்திட்டமாகும்.


தேசிய மலர்:

இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும்.


தேசியப் பறவை:

இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும். 

இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.

மயிலைப் பற்றிய
குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன.

 இந்தியாவின் தேசியப் பறவையாக 1963 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது

தேசியக் கனி:

இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம் ஆகும். 

மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக
ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது.

இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக்
குறிக்கின்றன, மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச்
சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும்.


தேசிய மரம்:

இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் ஆகும்.

 மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம்.

நீண்ட வாழ்நாள் உடையது.ஆல் அல்லது ஆலமரம் விழுதுகளை உடைய ஒரு மரம். 

இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.


தேசிய விளையாட்டு:

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்ற வளைதடிப் பந்தாட்டம் ஆகும்.

தேசிய இசைக்கருவி:


இந்தியாவின் தேசிய இசைக்கருவி வீணை ஆகும்.

 சரஸ்வதியின் கைகளில் வீணை
உள்ளது .வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும்
பிரபலம் வாய்ந்தது.

 இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக்
கருவியின் மூலம்
தெளிவாக வெளிப்படுத்தலாம்.


தேசிய பானம்:


இந்தியாவின் தேசிய பானம் தேனீர் ஆகும். 

அசாமில் முதன்முதலாக தேயிலை பயிரிட்ட
மணிராம் தேவனின் 2012-ம் ஆண்டு பிறந்த நாள் நினைவாக 2013ம் ஆண்டு ஏப்ரல்
17-ந் தேதி தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆக அறிவிக்கப்பட்டது.

தேசிய நதி:

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.

கங்கை இந்தியாவின் நீளமான நதி ஆகும். 
இமாலயத்தின் கங்கோத்ரி பனிப்படிவுகளில் இது உற்பத்தி ஆகும்போது இது பாகீரதி என்று
அழைக்கப்படுகிறது.

தேசிய நீர் விலங்கு:

இந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் டால்பின் ஆகும். 
இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை டால்பின் புனிதத்தின்
அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. 
இவை சுத்தாமான நீரில் மட்டுமே
வாழக்கூடியவை ஆகும்.

மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட வினா விடைகள்

1. எந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?

விடை- தேசிய கீதம் ஜன கண மன"

2. பாகீரதி என அழைக்கப்படும் நதி எது

விடை -கங்கை

|3. இந்தியாவின் தேசிய நாட்காட்டி எது

விடை -சக வருட நாட்காட்டி

4. இந்தியாவின் தேசியப் பாடல் எது

விடை- வந்தே மாதரம்

5. பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவர் வந்தே மாதரம் எனும் பாடலைஎம்மொழியில் எழுதினார்

விடை -வங்காள மொழியில்


6. இந்தியாவின் நீளமான நதி எது

விடை -கங்கை

7. இந்தியாவின் எப்பகுதியில்வாழும் டால்பின் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது

விடை -கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில்

8. தேனீர் இந்தியாவின் தேசிய பானமாக எந்த ஆண்டு
அறிவிக்கப்பட்டது?


விடை 2013


9. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் எந்த ஆண்டு
அறிவிக்கப்பட்டது


விடை 1963


10. சத்ய மேவ ஜயதே என்ற வார்த்தைகள் கொண்ட எழுத்துக்கள்எந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது

விடை -தேவநாகரி


Bright Zoom

இந்திய தேசியச் சின்னங்கள் பாெது அறிவு தகவள்கள்...! இந்திய தேசியச் சின்னங்கள் பாெது அறிவு தகவள்கள்...! Reviewed by Bright Zoom on March 20, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.