பொது அறிவு புவியியல் - பூமியும் சூரியக் குடும்பமும்

 பொது அறிவு புவியியல் - பூமியும் சூரியக் குடும்பமும் 


 சூரியன் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறைவதுபோல் தெரியும்.

 சூரியன் உதித்தபின் அதன் ஒளி வெள்ளத்தில் விண்மீன்கள் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

 ஆனால் சூரியன் மேற்கில் மறைந்தபின், விண்மீன்கள் மிகுந்த ஒளியுடன் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன.


எண்ணற்ற விண்மீன்கள் மின்னுகின்ற இரவுவானில் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பது சந்திரன்.

ஒவ்வொரு நாளும் சந்திரனின் வடிவம் மாறுகிறது. 

சிறு பிறை வடிவிலிருந்து வளர்ந்து வளர்ந்து முழுச்சந்திரன் எனவும்,

 பின்னர் தேய்ந்து தேய்ந்து அமாவாசை எனவும் சந்திரன் பல தோற்றங்களில் காட்சி தரும்.

ஒரு அமாவாசை முதல் அடுத்த அமாவாசைவரை பௌர்ணமி எனப்படும். 

முழுச்சந்திரன் நாள்முதல் அடுத்த முழுச்சந்திரன் நாள்வரை உள்ள காலம் சுமார் ஒரு மாதம் காலம் ஆகும். 

சந்திரன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விண்மீன்களுக்கு அருகே காட்சி தருகிறது.

 விண்மீன்கள் தவிர, இரவு வானில் நமது காட்சிக்கு புலப்படுவன கோள்கள்.

முதலாவதாக, விண்மீன்களை உற்று நோக்கினால் அவை மினுமினுப்பதைக் காணலாம். ஆனால், கோள்கள் சீராக ஒளிர்ந்தப்படி காட்சி தரும்.

 கோள்கள் மினுமினுப்பதில்லை.
இரண்டாவதாக, கோள்கள் ஒரே நிலையில் இருப்பதில்லை.

 இன்று ஒரு விண்மீன் அருகே காட்சி தரும் குறிப்பிட்ட கோள், சிறிது காலத்திற்குப் பின், வேறொரு விண்மீனுக்கருகே காட்சி தரும்.


இவ்வாறு, விண்மீன்களின் பின்னணியில் கோள்களின் நிலைமாறிமாறி அமையும்.

 தொலைநோக்கி போன்ற கருவிகள் இல்லாமல், வெறும் கண்களால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களை மட்டுமே பார்க்க முடியும். 

ஆனால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களைத் தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும்.


புதன், வெள்ளி ஆகிய கோள்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையில் மறைந்தபின்பும் புலப்படும்.

அவை சிறிதுநேரத்திற்கு தொடுவானம் அருகே மட்டும் புலப்படும். 

வெள்ளிக் கோள், காலையில் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு புலப்படும்போது 'விடிவெள்ளி" என அழைக்கின்றனர்.

செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று கோள்களும் இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ, மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும். 

ஐந்து கோள்களை மட்டும்தான் நாம் வெறும் கண்களால் காணமுடியும்.

இந்த ஐந்து கோள்கள் மற்றும் சந்திரன் (திங்கள்), சூரியன் (ஞாயிறு) ஆகியவை வாரத்தின் ஏழு நாள்களின் பெயர்களாக அமைந்துள்ளன.

சூரியனும், விண்மீன்களும் கிழக்கே உதித்து மேற்கே மறைவது போல நமக்குத் தோன்றுகின்றன. ஆனால், உண்மையில் பூமிதான் தன்னைத் தானே ஒவ்வொரு நாளும் சுற்றிக் கொள்கிறது.

பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்வதால்தான் சூரியனும் விண்மீன்களும் மற்றும் வான்பொருள்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்வது போன்றதொரு தோற்றம் கிடைக்கிறது.

சந்திரன் மற்றும் கோள்களைப் பொருத்தவரை தற்சுழற்சி மட்டுமல்லாமல், கிழக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாகவும் அவற்றின் நகர்வு நமக்குத் தெரிகிறது. 

சந்திரன், பூமியைச் சுற்றி வருகிறது. அதுபோல, கோள்கள் சூரியனைச் சுற்றி வருகிறது. எனவே, விண்மீன்களின் பின்னணியில் இவைநகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.


சூரியக் குடும்பம்:

தொலைநோக்கிகள் வழியே ஆராய்ந்தால் யுரேனஸ், நெப்டியூன், ஆகிய
கோள்களையும், குறுங்கோள்களையும், குள்ளக்கோள்களையும், வால்நட்சத்திரங்களையும், பல ஆயிரக்கணக்காண விண்மீன்களையும், அண்டங்களையும், வாயுத்திரள்களையும் காணலாம்.


சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்கள்.

 எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

 பூமியும் ஒரு கோள்தான். பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால், பற்பல உயிர்களும், நாமும் வாழ முடிகிறது.


சூரியக் குடும்பத்தில் எட்டுக்கோள்களையும் திடக்கோள்கள், வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள்.


வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள் எனப்படுகின்றன. 

பிற கோள்களின் வளிமண்டலங்களில் உயிர்வளி தவிரப் பிற வாயுக்கள் உள்ளன.

 எனவே அவற்றில் உயிர்கள் வாழ இயலாத நிலை உள்ளது.

சூரியனின் வட துருவத்திற்கு மேலே சென்று, ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் எல்லாக் கோள்களும் கடிகாரத்தின் எதிர்த் திசையில் சுற்றி வருவது போலப் புலப்படும்.

 எல்லாக் கோள்களும் ஒரே திசையில் சுழன்றாலும் சூரியனைச் சுற்றி வரும் காலம் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும்.

சூரியனைச் சுற்றும் கோள்கள் தம் பாதையை விட்டு விலகுவதில்லை. 

எல்லாக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சற்றேறக் குறைய ஒரே சமதளத்தில் சுற்றி வருகின்றன. 

கோள்கள் சுற்றி வரும் பாதையைச் சுற்றுப்பாதை என அழைக்கிறோம்.

சூரியன்:

சூரியக் குடும்பத்தின் நாயகன் சூரியன் தான். 

சூரியன், சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது.

 இது மிகப்பெரிய, மிக வெப்பமான வாயுப்பந்துஆகும்.

 இதன் ஈர்ப்பு சக்திதான் சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது.


சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சூரியன்தான். 

இது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. 

எனவே, சூரியன் மிகுந்த வெப்பமாக இருந்தாலும் மிதமான வெப்பமே பூமியை வந்தடைகிறது.

 சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன்தான்.

சனிக்கோளின் வளையம்:

தொலைநோக்கி வழியே பார்த்தால், சனிக்கோளைச் சுற்றி வளையம் போன்ற அமைப்பு காணப்படும். 

நுண்கற்களும் தூசும் பனியும் கொண்ட தொகுதியே இந்த வளையம். சனியின் வளையம்தான் எடுப்பானது என்றாலும் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன.

சிறு கோள்கள்:

புளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மியே முதலியன 2006 ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இவை அளவில் மிகச் சிறியவை. சந்திரனை விடச் சிறியவை. எனவேதான், இவை குள்ளக்கோள்கள் எனப்படுகின்றன.


எந்த கோள்களும் தானாக ஒளி உமிழும் தன்மை இல்லை. அதாவது, கோள்களுக்குச் சுய ஒளி கிடையாது. 

சூரிய ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.

bright zoom

பொது அறிவு புவியியல் - பூமியும் சூரியக் குடும்பமும்  பொது அறிவு புவியியல் - பூமியும் சூரியக் குடும்பமும் Reviewed by Bright Zoom on March 19, 2018 Rating: 5

1 comment:

Other Posts

Powered by Blogger.