உலக வரலாற்றில் இன்று(23-03-2018)
விண்ணையும் மண்ணையும் காப்போம்:
இன்று உலக வானிலை தினம்!!
உலக வானிலை தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
இதனை அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஜி.டி.நாயுடு:
'இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.
இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார்.
இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.
பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார்.
திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார்.
இதன்மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார்.
அதன்பின் தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டது.
பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.
அதன்பின்பு 'யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்" நிறுவனத்தை தொடங்கினார்.
பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.
ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன.
இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.
இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன.
இவரது அதிசய பருத்திச் செடிக்கு 'நாயுடு காட்டன்" என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.
கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் (1974) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
1752 – கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.
1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
1848 – நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
1857 – எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
1868 – கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
1903 – ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
1919 – இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1933 – ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர்கைப்பற்றினர்.
1956 – பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
1965 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவியராணுவப்பிரிவை தோற்கடித்தது.
1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
1994 – சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்குபசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
பிறப்புகள்:
1749 -பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)
1858 -லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)
1869 -எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)
1887 -ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)
1907 -டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)
1908 -ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி
1910 -ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)
1910 -அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)
1912 -வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)
1916 -ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)
1921 -லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )
1924 -பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)
1929 -ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்
1937 -ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்
1951 -செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
1953 -கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்
1976 -இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி
1979 -விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
இறப்புகள்:
1555 -மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
1922 -அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)
1924 -பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)
1931 -பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
1931 -சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)
1931 -சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)
1945 -நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)
1953 -ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)
1960 -சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)
1964 -யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872)
1992 -பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)
2000 -ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)
2000 -ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)
2011 -எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)
2012 -இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)
2015 -லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)
சிறப்பு நாள்:
பாக்கித்தான் தேசிய நாள்
உலக வானிலை நாள்
இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
March 23, 2018
Rating:
No comments: