நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்...!


நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்...!


நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் தான். 

அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.

இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். 

இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட
கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. 

நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல்

ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில

உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். 

அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு,
கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :


கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால்,
உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில்
தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :


சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :


பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக்

கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :


சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால்

அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :


அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த
நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். (Note this)

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும்
பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.



அவகேடோ:

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

Bright Zoom

நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்...! நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்...! Reviewed by Bright Zoom on March 23, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.