உலக வரலாற்றில் இன்றைய தின (11-04-2018) முக்கிய நிகழ்வுகள்...??

உலக வரலாற்றில்
இன்றைய தின (11-04-2018) 
முக்கிய நிகழ்வுகள்...??


உலக பார்க்கின்சன் தினம்

ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ் பார்க்கின்சன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிறந்தார்.

இவர் தான் பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். 

இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் , முடக்குவாத நடுக்கம்  என்று பெயரிட்டார். பின்னாளில் இது 'பார்க்கின்சன் நோய்" என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது 69வது வயதில் (1824) மறைந்தார்.

ஜோதிராவ் புலே( Jyotirao Govindrao Phule)

இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே ( Jyotirao Govindrao Phule)
  1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தார்.

சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1851-ல் மகளிருக்கான பள்ளியை தொடங்கினார். 

இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873-ல் தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு 'மகாத்மா" பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே தனது 63வது வயதில் (1890) மறைந்தார்.
கஸ்தூரிபாய் காந்தி



தன் கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் 1869ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

இவர் 1915ல் இந்திய விடுதலை போரில் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட்ட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். 

பல அறப்போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமைமிகு கஸ்தூரிபாய் காந்தி தன்னுடைய 74வது வயதில் (1944) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்:

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஆப்பிள் 1 (Apple) உருவாக்கப்பட்டது. 

 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.

1831 – உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
1899 – ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.

1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1965 – ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.

1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.

1987 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

2002 – வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.

2007 – அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.

2012 – இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிறப்புகள்

1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)

1910 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)

இறப்புகள்

1918 – ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)



உலக வரலாற்றில் இன்றைய தின (11-04-2018) முக்கிய நிகழ்வுகள்...?? உலக வரலாற்றில் இன்றைய தின (11-04-2018)  முக்கிய நிகழ்வுகள்...?? Reviewed by Bright Zoom on April 12, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.