கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து இழப்பதால் ஏற்படும் பாதிப்புகளும். அதைத்தடுக்கும் வழிமுறைகளும்...!

கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து இழப்பதால் ஏற்படும் பாதிப்புகளும்.
அதைத்தடுக்கும் வழிமுறைகளும்...!


நாம் வாழும் பூமிப்பந்தின் சுழற்சியால்
காற்று, மழை, குளிர், கோடை காலம் என தட்பவெப்பநிலை மாறி, மாறி வருகிறது.

பொதுவாக மழை காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சனைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

இதற்கு தீர்வாக பருவ நிலைக்கு ஏற்றவாறு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் மாற்றங்கள் :

நீர்ச்சத்து குறைபாட்டால், ரத்தத்தில் பிளாஸ்மா அளவு குறைகிறது.

இதனால் இதயத்திற்கு ரத்தம் குறைவாக கொண்டு செல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து இதயத்தின் பணி குறைந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் குறைவாக செல்லும் சூழல் உருவாகிறது.

குறிப்பாக, ஹைப்போ தெலாமஸ் என்னும் மூளையின் ஒரு பகுதி உடல் சூட்டை சரிசமமாக வைத்திருக்கும் பணியை செய்கிறது.

மூளையின் இந்த முக்கிய பகுதிக்கு ரத்தம் குறைவாக செல்லும்போது, அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் தலைச்சுற்றல் ஏற்பட்டு சுயநினைவின்றி மயக்கம் அடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரக பாதிப்பு :

நீர்ச்சத்து குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படும் உறுப்பு சிறுநீரகம். 

இந்த உறுப்புக்கும் ரத்தம் குறைவாக செல்வதால், இதன் வேலைப்பளுவும் குறைந்து போகிறது. 

அதனால் சிறுநீர் மிக குறைந்த அளவே வெளியேற்றப்படுகிறது.

இதனால் சிறுநீர்ப்பையில் கிருமி தொற்று ஏற்பட்டு அது நீர்க்கடுப்பை உண்டாக்குகிறது.

பச்சிளம் குழந்தைகள் :

பச்சிளம் குழந்தைகளை பொருத்தவரை குளிர் காலம் தான் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.

 ஆனால் கோடை காலத்தை பொருத்தவரை பயப்பட தேவையில்லை.

 பிறந்ததில் இருந்து 9 மாதம் வரை பச்சிளம் குழந்தைகளுக்கு வியர்க்காது. 

அதன்பிறகே தோல் வியர்வையை வெளியேற்றும் தன்மையை பெறும். 

அதனால் அவர்களுக்கு தாய்ப்பாலை தவறாமல் கொடுத்தால் நீர்ச்சத்து குறைவு ஏற்படாது. 

சிறுவர்-சிறுமிகள் :

3 வயது வரை உள்ள குழந்தைகளை, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தொண்டையில் கட்டி போன்ற நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும். 

 நீர்ச்சத்தை இழக்கும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் உள்ளது. 

2 மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர், இளநீர், மோர் ஆகியவற்றை குடிக்க கொடுப்பது நல்லது.

கர்ப்பிணிகள் :

கர்ப்பிணிகளை பொருத்தவரை நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 

அப்போது தான் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்கும்.

 அதுமட்டுமின்றி முட்டை, கீரை, பேரீட்சை போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. 

60 வயதுக்கு மேல் :

 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக நீர்ச்சத்து இழப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

 இவர்கள் வெயிலில் அதிகமாக செல்வதை குறைத்து கொள்ள வேண்டும். 

அவ்வாறு வெளியே செல்ல நேரிட்டால் கையுடன் குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. 

கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்பட்டால் நிழலில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

உடலின் வெப்பம் :

 கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகரித்து சூட்டை கிளப்பும்.

 அதனால் உடலின் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை உண்பது அவசியம். 

அப்போது தான் உடலின் சூடு அதிகரிக்காமல் இருக்கும்.

 அதனால் மோர், இளநீர், பழச்சாறுகளை அருந்துவது நல்லது. 

வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. 

இதனை தினமும் சாப்பிடுவதால் உடலின் சூடு தணிவதோடு உடல் வறட்சியும் நீங்கும்.





கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து இழப்பதால் ஏற்படும் பாதிப்புகளும். அதைத்தடுக்கும் வழிமுறைகளும்...! கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து இழப்பதால் ஏற்படும் பாதிப்புகளும். அதைத்தடுக்கும் வழிமுறைகளும்...! Reviewed by Bright Zoom on April 11, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.