கோடைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? கோடை நோய்கள் என்னென்ன?

கோடைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
கோடை நோய்கள் என்னென்ன?


 கோடைக்ககாலம் ஆரம்பித்துவிட்டது. 

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் நம்மை விரட்டத் தொடங்கிவிட்டது.

 இனிவரும் நாட்களில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துக்கொள்ளும். 


இவ்வாறு கோடைக்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.....


கோடையில் நாம் உடலைக் குளிர்ச்சியாக வைக்க அதிக அளவில் தண்ணீர் குடிப்போம்.


 ஆனால் எல்லா இடங்களிலும் நமக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பதில்லை.


 எனவே, அவசரத்துக்கு கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால், நீர் மூலம் பல நோய்கள் பரவுகின்றன. 


காலரா : 


விப்ரியோ காலரா என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்தான் காலரா. 


அசுத்தமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பற்ற உணவின் மூலமாக பரவுகிறது. 


காலராவின் முக்கிய அறிகுறி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி. உடலில் இருந்து, மிக அதிக அளவில் நீர் மற்றும் எலெக்ட்ரோலைட் எனும் வேதிப் பொருட்கள் வெளியேறும் போது உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது. 


சின்னம்மை :


 சின்னம்மை, வேரிசில்லா சோஸ்டர் வைரஸ் என்ற கிருமியால் பரவுகிறது.


 எளிதில் பரவும் தன்மை கொண்டது. முதலில் உடலில் அரிப்பு ஏற்படும். அதன் பின் நீர்க்கட்டி தோன்றும். 


இந்நோய் காற்று மூலம் பரவ நேரிடலாம். 


தும்மினாலோ, நேரடித் தொடர்பாலோ ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவுகிறது. 


மஞ்சள் காமாலை :


வெயில் காலத்தில், கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதால் வரும் நோய், மஞ்சள் காமாலை. மஞ்சள் காமாலை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.


 உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவோ அல்லது வைரஸ் கிருமித்தொற்று காரணமாகவோ வரவுகிறது. 


வைரஸ் கிருமித்தொற்றால், மஞ்சள் காமாலை வருவதற்கு, தண்ணீர் மாசுபாடே காரணம்.


 தண்ணீரில் பரவும் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் தான், மஞ்சள் காமாலை வருவதற்கான காரணம்.


பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் :


கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான துணிகள் பயன்படுத்தக்கூடாது.


 கோடையில் குழந்தைகளின் சருமம் வறட்சி அடையாமல் கவனிக்க வேண்டும். 


வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது.


 அதைத் தவிர்க்க, தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.


 நன்கு கொதிக்கவைத்து, ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். 


தினசரி, 2.5 முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.


 வெளியில் சென்று வந்தவுடன், குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.


மண்பாணையில் குளிர்விக்கப்பட்ட தண்ணீரை பருகுங்கள்


காபி, ஆல்கஹால் போன்ற பானங்கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத்தும். 


அதனால், உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, அவற்றைத் தவிர்ப்பது

நல்லது.

உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து காெள்வது  நல்லது...




கோடைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? கோடை நோய்கள் என்னென்ன? கோடைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? கோடை நோய்கள் என்னென்ன? Reviewed by Bright Zoom on April 03, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.