உலக வரலாற்றில் இன்று நடந்தது என்ன?-(03.04.2018)

உலக வரலாற்றில் இன்று நடந்தது என்ன?-(03.04.2018)


சாம் மானெக்ஷா

இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த 'பீல்டு மார்ஷல்" சாம் மானெக்ஷா (ளுயஅ ஆயநெமளாயற) 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி ஜம்ஷெட்ஜி மானெக்ஷா ஆகும்.

இவர் 1934-ல் ராணுவத்தில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரின் போது (1942) ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன. 

படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி வெற்றி கண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டீ.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி அங்கேயே அணிவித்தார்.

 பிறகு பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை 'சாம் பகதூர்" (துணிச்சல்காரர்) என்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948-ல் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தார்.

1962-ல் சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார். 

 1969-ல் இந்தியாவின் ராணுவத் தலைமை தளபதியானார். இவருக்கு 1968-ல் பத்மபூஷண், 1972-ல் பத்மவிபூஷண், 1973-ல் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது.

40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்ற சாம் மானெக்ஷா தனது 94வது வயதில் (2008) மறைந்தார். 
சத்ரபதி சிவாஜி



இன்று சத்ரபதி சிவாஜியின் 338வது நினைவு தினம்......!

 வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.

 தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக்காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார். 

 வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி தனது 53வது வயதில் (1680) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி உலகின் முதலாவது நகர்பேசி (ஆழடிடைந Phழநெ) அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. 

1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய உலகின் முதலாவது கணினி 'ஒஸ்போர்ன் 1" (ழுளடிழசநெ 1) சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.

1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.

1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.

1933 – நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.

1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் என்பவர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பருக்கு மேற்கொண்டார்.

1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.

1975 – பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது
 கடற்படையை அங்கு அனுப்பியது.

1996 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1914 – சாம் மானேக்சா, இந்திய இராணுவத் தலைமைத் தளபதி (இ. 2008)

1924 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (இ. 2004)

1934 – குட்டால், சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்

1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி

1955 – அரிகரன், இந்தியப் பாடகர்

1961 – எடி மர்பி, அமெரிக்க நடிகர்

1962 – ஜெயபிரதா, இந்திய
 நடிகை, அரசியல்வாதி

1973 – பிரபுதேவா, இந்திய நடிகர், நடன அமைப்பாளர்

1973 – ஆடம் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குனர்

1982 – கோபி ஸ்மல்டேர்ஸ், கனடிய நடிகர்

1986 – அமாண்டா பைன்ஸ், அமெரிக்க நடிகை

1989 – திசாரா பெரேரா, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630)

1897 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833)

1991 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904)

சிறப்பு நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள்








உலக வரலாற்றில் இன்று நடந்தது என்ன?-(03.04.2018) உலக வரலாற்றில் இன்று நடந்தது என்ன?-(03.04.2018) Reviewed by Bright Zoom on April 03, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.