TNPSC பொது அறிவு 2018 : மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்.

TNPSC  பொது அறிவு 2018 :



மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்.
(The answers to the TNPSC electromagnetism)

1. அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்?

 - யுரேனியம்

2. மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது?

 - நிக்ரோம்

3. மின் உற்பத்தி நிலையங்களில் .............. எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் அமைந்துள்ளன.

 - டர்பைன்கள்

4. மின்னோட்டத்தை தரும் மூலம் ...........

 - மின்கலம்

5. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 

- தமிழ்நாடு

6. பெரும்பாலான காற்றாலைகள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன? 

- தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி

7. முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்?

 - லூயி கால்வானி

8. சூரிய மின்கலன்கள் ஒளியாற்றலை .............. ஆற்றலாக மாற்றுகின்றன.

 - மின்

9. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி 

- கால்வனா மீட்டர்

10. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர் 

- கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்

11. கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும் போது அதைச்சுற்றி ------------ உருவாகிறது. 

- காந்தப்புலம்

12. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு?

 - மின் உருகு இழை

13. முதன்மை மின்கலன்கள் என்பவை ------------

 - ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடியவை.

14. துணை மின்கலன்கள் என்பவை -------------- 

- மின்னேற்றம் செய்து, மீண்டும் பயன்படுத்தக் கூடியவை.

15. மின்னோட்டம் செல்லும் போது மின்சுற்று ............. எனவும், மின்னோட்டம் செல்லாதபோது மின்சுற்று ............. எனவும் கூறலாம்.

 - மூடிய சுற்று, திறந்த சுற்று



16. மின்னோட்டம் செல்லும்போது பொருள் காந்தமாக்கப்பட்டால், அது .............. எனப்படும். 

- மின்காந்தம்

17. மின் உருகு இழை என்பது ............

 - கண்ணாடி அல்லது செராமிக் பொருளினுள் வைக்கப்பட்ட ஒரு கம்பியாகும்.

18. மின்மோட்டார், தந்திக்கருவி, தொலைபேசி, மின்சாரமணி போன்ற சாதனங்களில் ............... பயன்படுகின்றன. 

- மின்காந்தங்கள்

19. மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் ............... செயல்படுகிறது.

 - மின் உருகு இழை

20. கண்களில் தவறி விழும் இரும்புத்தூள் போன்ற காந்தப் பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் பயன்படுத்துவது ............ 

- சிறிய மின்காந்தங்கள்

21. வீணான பெருட்களின் குவியலில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க ............. பயன்படுகின்றன. 

- மின்காந்தங்கள்

22. அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதமடையாமல் தடுக்க ................ பயன்படுத்தப்படுகிறது.

 - மின் உருகு இழை

23. நிக்ரோம் என்பது ............ 

- நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை

24. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருள்கள் ............

 - கடத்திகள்

25. கடத்திகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுத் தருக.

 - தாமிரம், இரும்பு போன்ற எல்லா உலோகங்கள், மனித உடல், புவி.

26. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்காத பொருள்கள் ............

 - மின்காப்புப் பொருள்கள்

27. மின்காப்புப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக. 

- பிளாஸ்டிக், மரம், இரப்பர், கண்ணாடி.

28. மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன் 

- மின் விலாங்கு மீன்

29. இவ்வகை மீன்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன.

 - அமேசான் நதி, தென் அமெரிக்காவில் உள்ள ஓரினோக்கோ நதிப்படுகை

30. மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ............... உள்ளபோது உருகிவிடும்.

 - பெரும மதிப்பை விட அதிகமாக

TNPSC பொது அறிவு 2018 : மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள். TNPSC  பொது அறிவு 2018 :  மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள். Reviewed by Bright Zoom on April 28, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.