உலக வரலாற்றில் இன்று(( World History Today - (28.04.18)

உலக வரலாற்றில் இன்று(( World History Today - (28.04.18)



இன்று உலக கால்நடை தினம்:
(World Animal Day today)
 



வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்...!

 வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது.

 அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கால்நடை தினம்:

விலங்குகள் நலனில் அக்கறை கொள்வோம்.!

2000ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை (ஏப்ரல் 28) உலக கால்நடை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.

ஜான் ஹென்ரிக் ஊர்ட்
(John Henric Oort)


சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் (John Henric Oort
) 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

 உயர்-திசை வேகம் (High-directional speed) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதி 1926-ல் முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது. அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்திற்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள்.

 அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வழியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் வருவதை 1950-ல் கண்டறிந்து கூறினார்.

 ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 92வது வயதில் (1992) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்


1192 – ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.

1792 – பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.

1876 – இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.



1932ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் மறைந்தார்.


1945 – முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1952 – இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1965 – டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1978 – ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1995 – பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் “மார்ட்டின் பிறையன்ட்” என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.

2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001 – கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.

2005 – இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (இ. 1831)
1937 – சதாம் உசேன் – ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் (இ. 2006)

இறப்புகள்

1942 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)

1945 – முசோலினி, இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி (பி. 1883)

1955 – தி. வே. சுந்தரம் அய்யங்கார், இந்திய தொழிலதிபர் (பி. 1877

1999 – ஆர்தர் சவ்லோவ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)

2005 – தர்மரத்தினம் சிவராம், ஈழத்து ஊடகவியலாளர் (பி. 1959)

சிறப்பு நாள்

வேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்

ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும்.

 நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.







உலக வரலாற்றில் இன்று(( World History Today - (28.04.18) உலக வரலாற்றில் இன்று(( World History Today - (28.04.18) Reviewed by Bright Zoom on April 28, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.