உலக வரலாற்றில் இன்று ( World History Today - 08.05.2018)
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்!
உலக தாலசீமியா நோய் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக தாலசீமியா நோய் தினமாக கொண்டாடப்படுகிறது. தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு ரத்த சோகை ஏற்படும்.
மேலும், சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. இதனால், மக்களிடம் தாலசீமியா நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜான் ஹென்றி டியூனண்ட்
அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜான் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரு முறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு இவர் சென்றபோது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.
தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்கு திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். பிறகு 1864-ல் செஞ்சிலுவை சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901-ல் இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனித நேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 82வது வயதில் (1910) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 – பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மிக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா, கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போரில் கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 – லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)
1916 – சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)
இறப்புகள்
1947 – ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்
சிறப்பு நாள்
உலக செஞ்சிலுவை நாள்
ஐரோப்பா – வெற்றி நாள் (1945)
தென் கொரியா – பெற்றோர் நாள்
மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.

Reviewed by Bright Zoom
on
May 08, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
May 08, 2018
Rating:

No comments: