900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை...!!

900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை...!!





ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே பிராயச்சித்தம் அளிக்கும் புண்ணியத் தலமாக பாலிதானா என்ற புனித ஸ்தலம் கருதப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா அல்லது சமாதி நிலை எய்தியாகக் கூறப்படுகிறது. 


குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டம், ஷத்ருஞ்ஜய் மலைதான் இந்த பெருமைக்குரிய தலமாகும். மலை மேல் 900 கோயில்கள் உள்ளதாம்!

மார்பிளினால் உருவக்காப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத். இது 220 அடி உயரத்தில் உள்ளது.

இந்தக் கோயில்கள் கடவுளர்கள் அனைவரும் உறைய வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதாம். இரவில் அனைத்துக் கடவுளர்களும் இங்கு உறங்குவதாக ஐதீகம் உள்ளது. இதனால் கோயில் குருக்கள் இங்கு இரவு முழுதும் இருக்கவேண்டும்.

மோக்ஷம் வேண்டுவோரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பவும் இந்த கோயிலை ஒருமுறையாவது பக்தர்கள் தரிசிக்கவேண்டும் என்று ஜைன புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இங்குள்ள ஜைன மதக் கோயில்களில் சில: ஆதிநாத், குமர்பால், விமல்ஷா, சம்ப்ரதிராஜா, சௌமுக் ஆகியவை.

இந்தக் கோயில்களில் உள்ள விக்ரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளிப்படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும் அதனை அந்தக் குருக்கள் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசாக நினைத்து அதனை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. 



ஜைன்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மெக்கா போன்று. வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மலைக்கோயிலுக்கு செல்வது புண்ணியம் என்று கருதப்படுகிறது.

1618 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சௌமுக கோயில் இந்த இடத்தின் மிகப்பெரிய கோயிலாகும். மொத்தம் 900 கோயில்களும் 18 கிமீ சுற்றுப்பரப்பிலேயே அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம். பலர் நடந்தே செல்வது என்பதை பிரார்த்தனையாக வைத்துக் கொள்ள மற்றவர்கள் ரதம் மூலம் சுற்றிவருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர்.

13 ஆம் நூற்றாண்டின் தேஜ்பால் மற்றும், விஷுபால் சகோதரர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்ல கல்பாதை அமைத்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாலும் வேறு வேறு ஸ்தல புராணங்கள் உள்ளன.இந்த புண்ணியஸ் ஸ்தலத்திறு ரெயில், சாலை, மற்றும் வான் வழி போக்குவரத்துகள் உள்ளன. பலிதானா என்பது ஒரு சிறிய ரெயில் நிலையம் இங்கிருந்துதான் இந்த மலைக்கோயிலுக்கு எளிதாக செல்ல முடியும். ரெயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் பஸ் நிலையம் உள்ளது அங்கிருந்து ஏகப்பட்ட பஸ்கள் இந்த மலைக்கோயிலுக்கு விடப்பட்டுள்ளன. 


இந்த அரிய புனித ஸ்தலத்தின் அரிய புகைப்படங்கள் இதோ:





































Bright Zoom

900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை...!! 900 கோயில்கள் உள்ள உலகின் ஒரே அதிசய மலை...!! Reviewed by Bright Zoom on August 26, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.