லெயர்டெல் சுரங்க வழித்தடம், நார்வே
உலகிலேயே அதிகமான சுரங்க வழித்தடங்களை கொண்ட நாடாக இருப்பது நார்வே. இந்த நாட்டில் கிட்டத்தட்ட 900 சுரங்க வழிச்சாலைகள் இருக்கின்றன.
நார்வே நாட்டில் தென்கிழக்கு பகுதியில் லெயர்டெல் மற்றும் ஆர்லாந்து பகுதிகளை இணைக்கும் லெயர்டெல் சுரங்க வழித்தடம், 34.51 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் போது ஏற்படும் சிரமங்களை களையவே லெயர்டெல் சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டது.
1995ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் பணி 5 ஆண்டுகள் நடைபெற்றது. 2000ம் ஆண்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்த இந்த சுரங்க வழித்தடத்தில் அப்போதே பாதுகாப்பு காரணங்களுக்காக நவீன் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டன.
யம்மட்டே சுரங்க வழித்தடம், ஜப்பான்
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலுள்ள யம்மட்டே சுரங்க வழித்தடம் அந்நாட்டிலேயே இருக்கும் நீண்ட ஒரே சுரங்க வழிப்பாதை. உலகளவில் இது நீண்ட சுரங்க வழிச்சாலைக்கான பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
1970ம் ஆண்டில் முதன்முதலாக யம்மட்டே சுரங்க வழித்தடம் அமைப்பதற்கான திட்டங்கள் போடப்பட்டன. ஆனால் சுற்றுபுறச் சூழல், நீர்வளப் பாதிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி இதன் கட்டுமானப் பணி காலம் தாழ்த்தப்பட்டது
இறுதியில் 1992ம் ஆண்டில் யம்மட்டே சுரங்க வழித்தடத்திற்கான பணிகள் தொடங்கின. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, சுரங்கத்தின் முதற்கட்ட வழித்தடம் திறக்கப்பட்டது, பிறகு கடந்த 2015ம் ஆண்டில் இதன் முழு வழித்தடமும் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
18.2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க வழித்தடத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவே இல்லை. ஒவ்வொரு நூறு மீட்டர் இடைவெளியிலும் சிசிடிவி கேமரா, இன்ஃபிரா ரெட் சென்சார் கதிர்கள் மற்றும் அவசர தொலைபேசி என முக்கிய பாதுகாப்புகளை அளிக்கும் சாதனங்கள் ஜப்பானின் யம்மட்டே சுரங்கத்தில் உள்ளன.
ஜாங்கான்ஷான் சுரங்கபாதை, சீனா
போக்குவரத்து துறையில் உலகில் முதன்மையான நாடக உள்ள சீனாவின் பெருமித அடையாளமாக உள்ளது ஜாங்கான்ஷான் சுரங்க வழிப்பாதை. சீனாவின் ஷான்ஸி என்ற நகரத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்க வழித்தடம் 18.40 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
ஜாங்கனன் மலையில் அடிவாரத்தில் இந்த சுரங்க வழித்தடம் அமைந்துள்ளதால் பார்க்க எழில் கொஞ்சும் அழகுடன் இருக்கும். உலகின் அதிக நீளம் கொண்ட சுரங்கப்பாதைகளுக்கான பட்டியலில் ஜாங்கான்ஷான் சுரங்கபாதைக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 3.2 மில்லியன் யுவான்கள் செலவில் கட்டமைக்கப்பட்ட ஜாங்கான்ஷான் சுரங்கபாதை, 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. மிக இயற்கையான சூழ்நிலையில் இது அமைந்துள்ளதால் சீன அரசு, இந்த ஜாங்கான்ஷான் வழித்தடத்தில் செயற்கையான மரம், செடி மற்றும் புல்வெளிகளை அமைத்துள்ளது.
ஹோட்ஹார்ட் சுரங்க வழித்தடம், ஸ்விட்சர்லாந்து
ஸிவிட்சர்லாந்து நாட்டின் தென்பகுதிகயான ஏரோலோ மற்றும் டிசினோவை இணைக்கும் சுரங்க வழத்திடம் தான் ஹோட்ஹார்ட். 1970ம் ஆண்டிலே தொடங்கப்பட்ட இதற்கான பணிகள் 1980ம் ஆண்டில் தான் முடிக்கப்பட்டன.
ஐரோப்பியக் கண்டத்தில் எட்டு நாடுகளில் பரவிக் கிடக்கிறது ஆல்ப்ஸ் மலைத் தொடர். அதற்கு கீழே தான் ஹோட்ஹார்ட் சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 57 கிலோ மீட்டர் தொலைவுக்கொண்ட இந்த சுரங்க வழித்தடத்தில் இரயில் பாதையும் உள்ளது.
சுரங்கத்தின் ஒரு பகுதியிலுள்ள ரயில் போக்குவரத்தில் இரட்டைத் தண்டவாளங்கள் உள்ளன. தினமும் 65 பயணிகள் ரயில்களும், 250 சரக்கு ரயில்களும் இதில் பயணிக்கும்.
ஆல்பெர்க் சுரங்க வழித்தடம், ஆஸ்திரியா
ஆல்பெர்க் சுரங்க வழிச்சாலை தான் ஆஸ்திரியா நாட்டின் மீக நீளமான சுரங்கம் வழிப்பாதை. 13.9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்க வழிச்சாலை 1978ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, 1980ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஒரு மணி நேரத்தில் 1800 வாகனங்கள் வரை செல்லக்கூடிய வசதிக்கொண்ட ஆல்பெர்க் சுரங்க வழிச்சாலையில் மாசுப்புகை காற்றுடன் வெளியேற சிறந்த வென்டிலேஷன் பெற்ற தொழில்நுட்பம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1228 மீட்டர் உயரத்தில் உள்ள ஆல்பெர்க் சுரங்கத்தின் மூலம் ஆந்நாட்டின் பொருளாதரமும் சற்று உயர்ந்துள்ளது. மிருதவான தட்பவெட்ப நிலையில் அமைந்திருக்கும் இந்த சுரங்க வழித்தடத்தில் பயணிக்க அதிக சுங்க கட்டணத்தையும் நாம் தரவேண்டும் என்பது கொஞ்சம் வருத்தமான செய்தி
ஹிசுயேஷான் சுரங்க வழித்தடம், தைவான்
தைவான் நாட்டில் ஹிசுயேஷான் சுரங்க வழித்தடம் நாட்டின் அதிக நீளம் கொண்ட சுரங்கப் பாதைகளுக்கான பட்டியலில் முன்னிலையில் உள்ளது. 12.94 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இதில் இரண்டு பண்பலை அலைவரிசை நிலையங்கள் மற்றும் ஒரு வானொலி நிலையமும் இயங்குகிறது.
சுரங்கத்திற்குள் செல்லும் ஓட்டுநர்களுக்கு சாலையில் பயணிக்கும் முறையை குறித்தும், டிராஃபிக்கை குறித்தும் உடனுக்குடனான தகவல்களை இதிலுள்ள வானொலி நிலையங்கள் வழங்கும். மேலும் இசையுடன் கூடிய ஒரு பயணத்தையும் நாம் ஹிசுயேஷான் சுரங்க வழித்தடத்தில் மேற்கொள்ளலாம்.
ஃபெரெஜூஸ் சுரங்க வழித்தடம் (ஃபிரான்ஸ், இத்தாலி)
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கக்கூடிய மற்றோரு முக்கியமான சுரங்க வழித்தடம் தான் ஃபெரெஜூஸ். ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலியை இணைக்கும் இந்த சுரங்க வழித்தடம் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதாரா வளர்ச்சியை தரும் பகுதியாகவும் உள்ளது.
12.87 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஃபெரெஜூஸ் சுரங்க வழிச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நிறுத்தம் உலகப் புகழ்பெற்றவை. பெரும்பாலும் இந்த சாலையை தேர்ந்தெடுத்து பயணிப்பவர்கள் 80 சதவீதம் பயணத்தை போக்குவரத்து நிறுதத்தில் தான் செலவழிக்க வேண்டும்.
ஃபிரான்ஸின் முக்கிய வணிகப்பகுதியான மொடான் மற்றும் இத்தாலியின் மற்றொரு பகுதியான பார்டன்னெக்கியா ஆகிய நகரங்களை இணைப்பதால் எப்போதும் ஃபெரெஜூஸ் சுரங்க வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
மௌன்ட் பிளாங்க் சுரங்க வழித்தடம் (ஃபிரான்ஸ், இத்தாலி)
உலகின் அதிகமான சுரங்கங்களை கொண்டுயிருக்கும் மலைச்சிகரமாக இருந்து வருகிறது ஆல்ப்ஸ். ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து உட்பட எட்டு நாடுகளில் பரவிக் கிடக்கும் ஆல்பஸ் மலைப்பகுதி முக்கிய போக்குவரத்தாகவும் இருந்து வருவதால், இதில் எளிமையான பயணித்திற்காக சுரங்க வழிச்சாலைகள் அதிகளவில் உள்ளன.
ஃபிரான்ஸ், இத்தாலி நாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய முக்கிய வழித்தடம் தான் மாண்ட் பிளாங் சுரங்க வழிப்பாதை. இந்த சுரங்க வழித்தடம் அல்லாது இத்தாலி நாடு , ஃபிரேன்ஸோடு போக்குவரத்து ஒப்பந்தங்களை செய்து கொண்டால் கிட்டத்தட்ட டன் கணக்கில் அதற்காக செலவழிக்க வேண்டும்.
பொருளாதராத்தை சீறப்பாக மேற்கொள்ளவும், எளிமையான போக்குவரத்தை பயன்படுத்தவும் மான்ட் பிளாங் சுரங்க வழிப்பாதை இத்தாலிக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
குட்வேன்ஜன் சுரங்க வழித்தடம் (நார்வே)
நார்வே நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான சுரங்க வழிப்பாதைகளில் ஒன்று குட்வேன்ஜன். ஆர்லாண்ட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த சுரங்க வழித்தடம் 11.42 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
நார்வே நாட்டின் அதிக நீளம் கொண்ட சுரங்க வழித்தடங்களில் குட்வேன்ஜன் சுரங்கப் பாதை 2வது இடத்தில் உள்ளது. 1991ம் ஆண்டில் திறக்கப்பட்ட இது உலக கவனம் பெற்ற இரண்டு விபத்துகள் காரணமாக அமைந்தன.
2013ம் ஆண்டில் நடைபெற்ற விபத்தின் போது டிரக் லாரி ஒன்று திடீர் தீ பிடித்ததால் 55 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின் 2015ம் ஆண்டில் சுற்றுலா பேருந்து ஒன்று திடீர் தீ பிடித்தது. ஆனால் நல்லவேளையாக இரண்டு விபத்துகளிலும் உயரி சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஃபால்ஜேஃபானா சுரங்க வழித்தடம் (நார்வே)
நார்வே நாட்டில் இருக்கும் மற்றொரு முக்கியமான சுரங்க வழித்தடம் ஃபால்ஜேஃபானா சுரங்கப்பாதை. 2001ம் ஆண்டில் திறக்கப்பட்ட இது 11.15 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
நார்வே நாட்டின் மூன்றாவது பெரிய சுரங்க வழித்தடமாக உள்ள ஃபால்ஜேஃபானா முக்கிய போக்குவரத்து சாலையாகவும் உள்ளது.இந்த சுரங்க வழித்தடத்தை பயன்படுத்தி நார்வே நாட்டிலுள்ள முக்கிய சுற்றுலாத் தளமான ஓஸ்லாவிலிருந்து பெர்ஹன் வரை வெறும் பத்தே நிமிடங்களில் சென்றடைந்துவிட முடியும்.
இந்தியாவின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் செனானி- நாஷ்ரி சுரங்கப்பாதையும் விரைவில் உலகின் நீளமான சுரங்க வழித்தடத்திற்கான பட்டியலில் இடம்பெறும் என நாமும் எதிர்பார்க்கலாம்.
உலகில் உள்ள அதிகதொலை தூரம் பயணிக்ககூடிய நீண்ட பத்து சுரங்க வழிச்சாலைகள்...!!
Reviewed by Bright Zoom
on
August 12, 2018
Rating:






























No comments: