எட்டாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் பருவம்
பாரதத்தாய்..!!
வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்
வண்மையும் தியாகமும் இணைதீர்
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
துலங்கிடத் தீமையும் துயரும்
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
செங்கதி ரவனெனத் தகைய
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
தாள்மலர் பணிவதே தவமாம் .
வண்மையும் தியாகமும் இணைதீர்
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
துலங்கிடத் தீமையும் துயரும்
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
செங்கதி ரவனெனத் தகைய
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
தாள்மலர் பணிவதே தவமாம் .
– அசலாம்பிகை அம்மையார்
பொருள் :
- உண்மை, அறம், பிறர் துன்பம் நீங்கும் திறன், தியாகம்,
இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை இக்கலிகாலத்தில் வளர்ந்து
விளங்கச் செய்பவன். தீமை, துன்பம் இவற்றை அகன்றோடச்
செய்யும் கருணைக் கதிரவன் போன்றவன். தாய்மையுள்ளம்
கொண்டவன். இத்தகைய தன்மைகள் கொண்ட மகாத்மா
காந்தியை ஈன்றெடுத்த பாரதத்தாயின் மலரடிகளைப் போற்றி
வணங்குவதே பெரும் பேறாகும்.
சொற்பொருள் :
1. வாய்மை – உண்மை
2. களையும் – நீக்கும்
3. வண்மை – வள்ளல் தன்மை
4. துலங்குதல் – விளங்குதல்
5. சேய்மை – தொலைவு
6. தவம் – பெரும்பேறு
2. களையும் – நீக்கும்
3. வண்மை – வள்ளல் தன்மை
4. துலங்குதல் – விளங்குதல்
5. சேய்மை – தொலைவு
6. தவம் – பெரும்பேறு
பிரித்தறிதல் :
- தாய்மையின் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : அசலாம்பிகை அம்மையார்
பிறந்த ஊர் : திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை.
பிறந்த ஊர் : திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை.
இயற்றிய நூல்கள் :
- ஆத்திசூடி வெண்பா
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்.
சிறப்பு :
- அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர். இவரை இக்கால
ஒளவையார் என்று திரு.வி.க. பாராட்டுவார். இவர் பலகாலம்
திருப்பாதிரிப்புலியூரில்(கடலூர்) வாழ்ந்தார். இறுதிக்காலத்தில்
சில ஆண்டு வடலூரில் வாழ்ந்தார். அப்போது, நானூற்று ஒன்பது
பாடல்களைக்கொண்ட இராமலிங்சுவாமிகள் சரிதம் என்னும்
செய்யுள் நூலை இயற்றினார்.
நூல் குறிப்பு :
- காந்திபுராணம், ஈராயிரத்து முப்பத்து நான்கு பாடல்களைக்
கொண்டது. இந்நூல் காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராக
கொண்டு பாடப்பெற்றது.
எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாரதத்தாய்..!!
Reviewed by Bright Zoom
on
August 23, 2018
Rating:

No comments: