இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு
- வேலு நாச்சியார், வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே
அமையப்பெற்றவர். அவரேஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி. - இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்செல்லமுத்து சேதுபதி – சக்கந்தி
முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730 ஆம் ஆண்டு ஒரே பெண்
மகளாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். - இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு,
ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கை
மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார். - அங்கிலேயர் 1722 ஆம் ஆண்டு சிவகங்கை சீமையின்மீது
படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும்
இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர்
வீரமரணமடைந்தார். - வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து,
ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன்
அனுப்பினார். - மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச்
சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதித்துப் போரிட்டார்.
அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டு
சிவகங்கையை மீட்டார்.
அஞ்சலையம்மாள் :
- இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில்உள்ள முதுநகரில்
- எளிமையான
குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள்
ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே,
அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். - அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்
காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார். - மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய
சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது,
கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில்
அனுப்பிவிட்டு மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது. - குடும்பச் சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்று,
விடுதலைப் போரட்டத்திற்காகச் செலவு செய்தார்.
நீலன் சிலையை அகற்றும் போரட்டத்தில் தம்முடைய ஒன்பது
வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்
சிறைத்தண்டனை பெற்றார். - காந்தியடிகள் சிறையில் இருப்பவர்களைப் பார்க்க வந்தபோது, ஒன்பது வயதேயானஅம்மாக்கண்ணு,அஞ்சலையம்மாளின் மகள் என்பதனை அறிந்து, மிகவும் மகிழ்வுற்று, அச்சிறுமியைத் தன்னுடன்வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்குஅழைத்துச்சென்று லீலாவதி எனப் பெயரிட்டுப்படிக்கவும் வைத்தார்.
- காந்தியடிகள் அஞ்சலையம்மளைத்தென்நாட்டின் ஜான்சிராணி
என்றழைத்தார்.
அம்புஜத்தம்மாள் :
- வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்எனப் பழமொழிகளையும் திறம்படப் பயின்றார்.
- வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி
முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி
விடுதலையுணர்வை ஊட்டினார். - காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக
அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார். தன் தந்தையின் பெயரோடு,
காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். - அம்புஜத்தம்மாள் தாம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம்
என்னும் அறிய நூலை எழுதியுள்ளார்.1964 ஆம் ஆண்டு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றுள்ளார்.
இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு
வேலு நாச்சியார்,
அஞ்சலையம்மாள்,
அம்புஜத்தம்மாள்,
Bright Zoom
இந்திய விடுதலைப் போரில் – தமிழகப்பெண்களின் பங்கு
Reviewed by Bright Zoom
on
August 23, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
August 23, 2018
Rating:


No comments: