உலகில் உள்ள
வித்யாசமான மர
வகைகள்.
இந்த உலகில் எல்லாவற்றிலும் மிகவும் வித்தியாசமானவைகள் இருக்கின்றன.அதில் சில அழகாக ரசிக்கும் படி இருக்கும்,சில அசிங்கமாக அப்பதாகவும் இருக்கும். அது போன்று மிகவும் அழகாக காட்சியளிக்கும் உலகின் மிகவும் வித்தியாசமான மரங்களின் தொகுப்பு தான் இந்த பதிவு.
1.டா ப்ராம், கம்போடியா
கம்போடியாவில் சீஎம் ரீப் என்ற இடத்திற்கு அருகே உள்ள அங்கோர் காம்ப்ளக்ஸ் என்னுமிடத்தில் இந்த மரம் உள்ளது.இது அங்கு மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
2.ஜெயண்ட் சீக்யூஸ், கலிபோர்னியா
கலிபோர்னியாவில் Sequoia National Park என்ற இடத்தில் இந்த மரங்கள் உள்ளது.இந்த இடம் உலகின் உள்ள பெரிய மரங்களில் விடு என்று அழைக்கப்படுகிறது.
3.பீச் மரப் பாதை, வடக்கு அயர்லாந்து
வடக்கு அயர்லாந்தில் உள்ள ஆண்டிரிமில் என்ற இடத்தில் உள்ளது இந்த பீச் மரங்களின் இந்த சுரங்கப்பாதை.இது 18 ஆம் நூற்றாண்டில்,சாலை வழியாக தனது வீட்டிற்கு வரும் பாதை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதனால் நடப்பட்டது.
4.கலிபோர்னியாவின் ரெட்வுட்
உலகிலேயே மிக உயரமான மரங்களான இவை, கலிபோர்னியாவில் சிவப்பு கடற்கரையோரத்தின் நிலப்பகுதியின் குறுகலான நிலப்பரப்பில் வளர்ந்துள்ளது.
5.டிராகனின் இரத்த மரங்கள், சாக்கோட்டா தீவு
இந்தியப் பெருங்கடலில் (யேமனின் பிரதேசத்தின் ஒரு பகுதி) சோகோட்ரா தீவுப் பகுதியில் காணப்படும் இந்த மரங்கள் டிராகன்ஸ் பிளட் ட்ரீஸ் என்று அழைக்கபடுகின்றது.
6.விஸ்டீரியா "மரங்கள்" ஜப்பான்
இந்த மரம் ஒரு வகையான திராட்சை மரம்.இந்த மர வகைகள் ஜப்பானில் பல ஆண்டுகளாக வளந்து வருகிறது.
7.ரெயின்போ யூகலிப்டஸ்
ரெயின்போ யூகலிப்டஸ் மரங்கள் பெரும்பாலும் பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இதன் மேல் பட்டை விழும் போது இதனுள் வித்தியாசமான வண்ணம் வெளிப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.மேலும் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க இந்த தகவலை பகிருங்கள்.
Bright zoom
உலகில் உள்ள வித்யாசமான மர வகைகள்.
Reviewed by Bright Zoom
on
August 02, 2018
Rating:

No comments: