இன்றய நடப்பு நிகழ்வுகள்13-09-18
தமிழகம்
1.எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
2.சென்னை-சேலம் இடையே அமைக்கத் திட்டமிடப்பட்ட பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) முடிவு செய்துள்ளது.
இந்தியா
1.விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய ஆதார விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ரூ.15,000 கோடியில் புதிய வேளாண் பொருள்கள் கொள்முதல் கொள்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2.மக்களவையின் நெறிமுறைகள் குழுத் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.பத்ம பூஷண் விருது பெற்றவரும், விவசாயத் துறை சார்ந்த பொருளாதார வல்லுநருமான விஜய் சங்கர் வியாஸ் புதன்கிழமை காலமானார்.இந்திய மேலாண்மை நிறுவனம்(ஐஐஎம்) ஆமதாபாத்தின் இயக்குநராகவும், ஜெய்ப்பூரில் உள்ள இந்திய மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.
உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பான விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறையின் மூத்த ஆலோசகராக பதவி வகித்துள்ளார். விவசாய பொருளாதாரத்துக்கான அவரது பங்களிப்பை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவப்படுத்தியது.
வர்த்தகம்
1.நாட்டின் ஏற்றுமதி, 2,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
2.கடந்த, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 3.69 சதவீதமாக சரிவடைந்துஉள்ளது. இது, ஜூலையில், 4.17 சதவீதமாக இருந்தது.
3.ஜி.எஸ்.டி., நடைமுறைக்குப் பின், தமிழகத்தில், 4 லட்சம் வணிகர்கள், புதிதாக பதிவு செய்துள்ளனர் என, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம்
1.மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
2.மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து நேரில் விசாரிக்க, ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.
விளையாட்டு
1.இந்தியாவுக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
2.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணை ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற மலேசியாவின் ஜோ விசெம்-டேன் விகியோங் இணையை வென்றனர்.
இன்றைய தினம்
- உலக சாக்லேட் தினம்
- நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
- ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
- ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)
Bright Zoom.
Reviewed by Bright Zoom
on
September 13, 2018
Rating:
No comments: