உதவித்தொகையுடன் பி.எச்டி., படிப்பு
புனேவில் செயல்படும் இன்டர்-யூனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ் (ஐ.யு.சி.ஏ.ஏ.,) மற்றும் நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ் (என்.சி.ஆர்.ஏ.,) கல்வி நிறுவனங்களில், உதவித்தொகையுடன் கூடிய பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான, தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்பு: பிஎச்.டி., - ஆஸ்ட்ரோனமி, அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் பிசிக்ஸ்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை முறை: இத்தேர்வில் பங்கேற்க கல்வி நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 21
தேர்வு நாள்: டிசம்பர் 13
விபரங்களுக்கு: http://inat.ncra.tifr.res.in
உதவித்தொகையுடன் பி.எச்டி., படிப்பு
Reviewed by Bright Zoom
on
September 12, 2018
Rating:
No comments: