TNPSC 2018 பொது அறிவு - உயிரியல் - நமது சுற்றுச்சூழல்...

TNPSC  2018
பொது அறிவு - உயிரியல் 
- நமது சுற்றுச்சூழல்...

  நம்மைச் சுற்றிலும் காணப்படும் காற்று, ஒளி, நிலம், நீர்நிலைகள், தாவரங்கள், விலங்குகள், எனப் பலவும் கொண்டதே சுற்றுச்சூழல்.
சுற்றுச்சூழலில் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதோடு உயிரற்ற பொருள்களையும் சார்ந்து வாழ்கின்றன. எனவே சுற்றுச்சூழலில் ஏற்படும் சிறிய மாற்றம் உயிரினங்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தற்காலத்தில் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டு, மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளன. இன்று நமது சுற்றுப்புறச்சூழல் தொடர்பான வினா விடைகள் பற்றி காண்போம்.

1. மக்காத குப்பைகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக. 

- உலோகங்கள், நெகிழிப் பொருள்கள்


2. நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளினால் மக்கும் குப்பைகள், இயற்கை உரமாகச் சிதைவுறும் நிகழ்ச்சி ................ எனப்படும். 

- உரமாதல்

3. கழிவுகளிலிருந்து பயன் தரத்தக்க பொருள்களைப் பிரித்தெடுத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு .............. என்று பெயர்.

 - மறுசுழற்சி முறை



4. மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் குப்பைகளைச் சிதைவுறச் செய்து தயாரிக்கும் உரம் .............. 

- மண்புழு உரம்



5. மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறை ............. 

- எரித்துச் சாம்பலாக்குதல்



6. உரம் தயாரிப்பில் பயன்படும் உயிரி 

- மண்புழு


7. நிலக்குவிப்பின் மேல் உருவாக்கப்பட்டுள்ள இந்திரபிரஸ்தா பூங்கா எங்கு அமைந்துள்ளது?

 - தில்லி


8. நெகிழி முதன் முதலாக எங்கு, எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 

- இலண்டன், 1862


9. மோட்டார் வாகனத்தில் ................ சதவீத எரிபொருள் அதை ஓட்டப் பயன்படுகிறது.

 - 30


10. வாகனத்தில் உள்ள எரிபொருள் .............. என்ற நச்சு வாயுவாக வெளியேறுகிறது? 

- கார்பன் மோனாக்சைடு


11. ஒரு நாளில் தன் எடைக்குச் சமமான அளவு உணவை உண்ணும் உயிரி எது? 

- மண்புழு


12. உலகச் சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? 
- ஜூன் 5

13. நெகிழியை எரிக்கும்பொழுது வெளியேறும் நச்சு வாயு எது? 

- டையாக்ஸின்



14. குப்பைகளை மண்ணில் மட்கச் செய்பவை ............. - நுண்ணுயிரிகள், மண்புழுக்கள்



15. உரமாக மாறக்கூடிய கழிவு .................
 - வீட்டுக் கழிவுகள்





TNPSC 2018 பொது அறிவு - உயிரியல் - நமது சுற்றுச்சூழல்... TNPSC  2018 பொது அறிவு - உயிரியல்  - நமது சுற்றுச்சூழல்... Reviewed by Bright Zoom on September 16, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.