உலக வரலாற்றில் இன்று...! செப்டம்பர் 21 !!

உலக வரலாற்றில் இன்று...!
செப்டம்பர் 21 !!

இன்றைய வரலாற்று நிகழ்வுகள்...!

இன்று உலக அமைதி தினம்....


💐 "உலக அமைதி தினம்"💐

🐦 உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

🐦 உலக சமாதான முயற்சியின்போது ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம்.

🐦 இதனை அடுத்து 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா. பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🐦 இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இன்று மட்டுமின்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

🎆உலக அல்சைமர் தினம்🎆

🌟 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறக்க வைத்துவிடும் நோய் தான், அல்சைமர். இந்நோய் 65 வயது தாண்டியவர்களை அதிகம் பாதிக்கிறது.

🌟 அல்சைமர் நோயை பற்றியும் அதனால் தொடர்புடைய முதுமை மறதியை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

✨ஹெச்.ஜி.வெல்ஸ்✨


✍ வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ்  1866ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் பிறந்தார்.

✍ இவரது முதல் நாவலான 'தி டைம் மெஷின்" 1895-ல் வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்றது. இதன்பின் இவர் இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.

✍ இவர் தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த 'அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டிரி" புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. 'தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ", 'தி இன்விசிபிள் மேன்", 'தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்", 'தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம்" ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும், புகழையும் ஈட்டித் தந்தது.

✍ வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தனது 79வது வயதில் (1946) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்

✈ 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி; கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

முத்தான சிந்தனை துளிகள் !

'நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையை ஒரு குழந்தையின் புன்னகையை போல எதிர்கொள்ளுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

Bright Zoom

உலக வரலாற்றில் இன்று...! செப்டம்பர் 21 !! உலக வரலாற்றில் இன்று...! செப்டம்பர் 21 !! Reviewed by Bright Zoom on September 21, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.