முயல் வளர்ப்பு !!
🐇 ஆடு, மாடு, கோழி என பல்வேறு கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் நல்ல லாபம் பார்த்து வருகின்ற நிலைமையில், குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு தொழில் பற்றி இன்று காண்போம்.
வளார்ப்புக்கு தேவையான இனங்கள் :
🐇 முதலில் முயல் வளர்ப்புக்கு ஏற்ற நல்ல முயல்களை தேர்வு செய்ய வேண்டும். பொருளாதார பலன்களை அதிகளவில் பெற தகுந்த இனங்களைத் (வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியு+சீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள்) தேர்வு செய்ய வேண்டும்.
🐇 இவற்றில் அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 ̊ஊ) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்க வேண்;டும்.
🐇 இனப்பெருக்கம் செய்ய பயன்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் வெவ்வேறு இனமாகவும், ஒரு வருடத்திற்கு குறைவாகவும், எந்த குறைபாடும் இல்லாத முயல்களை தேர்வு செய்ய வேண்டும்.
இடம் மற்றும் குடில் தேர்வு செய்தல் :
🐇 குறைந்த எண்ணிக்கையில் உள்ள முயல்களுக்கு, ஒற்றை அடுக்கு கூண்டு அமைப்பே போதுமானது.
🐇 அதிக அளவில் வளர்க்கும் முயல் பண்ணைகளுக்கு, ஒன்று (அ) இரண்டு அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்கள் அமைக்க வேண்டும்.
🐇 முயல் வளர்க்கும் குடில்களை அஸ்பெட்டாஸ் (அ) தென்னங்கீற்று கொண்டு கூரையை அமைக்க வேண்டும்.
🐇 எந்த விதமான இரை தேடும் பறவைகளும் உள்ளே நுழையாதவாறு கூண்டை அமைக்க வேண்டும்.
🐇 மேலும் வெப்பநிலை 10-30 ̊ செல்ஸியஸ் அளவும், ஈரப்பதம் 60-70மூ அளவு வருடம் முழுவதும் உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
🐇 மேலும் முயல்களுக்கு சுத்தமான நீர், மின்சாரம், தீவனங்களை வழங்குதல், தீவனம், உணவு, மருத்துவ உதவி ஆகியவை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
🐇 ஒவ்வொரு முயலுக்கும் போதுமான இடம் ஒதுக்க வேண்டும். கூண்டை நுண்ணுயிர் நீக்கம் செய்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
🐇 மேலும் வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 ஒ 1.5 ஒ 1.5) அளவுள்ள கூண்டும், பெண் முயலுக்கு (2.0 ஒ 2.5 ஒ 3.0) அளவுள்ள கூண்டும் ஏற்றது.
🐇 இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு என சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
முயல் வளர்ப்பின் நன்மைகள் : முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது.பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால், சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்.ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பெறலாம்.உரோமம் மட்டுமல்லாமல், எருவிலிருந்தும் வருமானம் கிடைக்கப் பெறுகிறது.
முயல் வளர்ப்பு !!
Reviewed by Bright Zoom
on
February 13, 2019
Rating:
No comments: