கலப்படத்தை கண்டுபிடிக்கும் வழிகள் !!
எங்கும் கலப்படம்... எதிலும் கலப்படம்... கண்டுபிடிக்க வழி?...
🌿 விளையும் பொருள் இயற்கையாக விளைந்தாலும், செயற்கையாக விளைந்தாலும் அதில் கலப்படம் செய்வது மட்டும் மாறவில்லை.
🌿 கலப்படம் செய்த பொருட்களை வாங்குவதால் பணத்திற்கும் கேடு, உண்பதால் உடம்பிற்கும் கேடு.
🌿 ஒரு விவசாயி அனைத்துப் பொருட்களையும் அவர்களாகவே உற்பத்தி செய்ய முடியாது. அவசரத் தேவைக்கு வெளியில் தான் வாங்கவேண்டியுள்ளது.
🌿 நமக்கு தெரியாமல் அவர்கள் கலப்படம் செய்யலாம். ஆனால் சில யுக்திகளைப் பயன்படுத்தி ஒரு சில பொருட்களில் கலப்படம் செய்துள்ளதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
🌿 எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நமக்கு தானே நல்லது.
இனிக்கும் சர்க்கரையில் கலப்படம்...
🌿 சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்த்த கலப்பட சர்க்கரை விற்பனை அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது.
🌿 இதைக் கண்டுபிடிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
🌿 சுண்ணாம்பு தூள் கலந்த கலப்படமாக இருந்தால், அடிப்பகுதியில் சுண்ணாம்பு தூள் படிந்து இருக்கும். நல்ல சர்க்கரையாக இருந்தால் சர்க்கரை அனைத்தும் கரைந்து விடும்.
தேன் வாங்கறீங்களா... கவனம்
🐝 கலப்பட பொருட்களிலே தேன் கலப்படம் தான் ஜோராக போய்கொண்டு உள்ளது. இதுல கலப்படம் இருப்பதையும் எளிதாக கண்டுபிடிக்கலாம்.
🐝 ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சொட்டுத் தேனை விட வேண்டும். தேன் கரையாமல், கலங்காமல் அப்படியே அடியில் படிந்தால் அது சுத்தமான தேன் தான்.
🐝 கலப்படம் இல்லாத தேன், எவ்வளவு நாட்கள் இருந்தாலும், எறும்புகள் மொய்க்காது.
🐝 ஒரு சிறிய துண்டு பேப்பரை எடுத்து, அதில் இரண்டு துளி தேனைவிட வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால் பேப்பரின், பின்புறம் ஊறி கசியாமல் இருக்கும். தேன் போலியானதாக இருந்தால், கசிந்து பேப்பருக்கு வெளியில் வந்துடும்.
🐝 அடுத்ததாக, மண்ணில் ஒரு சொட்டுத் தேனை விட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து, தேனை வாயால் ஊத வேண்டும்.
🐝 தேன் மட்டும் உருண்டோடினால், அது சுத்தமான தேன். மண்ணில் விட்டவுடன் உள்பக்கமாக இறங்கினால் அது கண்டிப்பாக கலப்படம்தான்.
தேங்காய் எண்ணெய்... கலப்படம்
🌿 தேங்காய் எண்ணெயில், மற்ற எண்ணெயைக் கலந்து விடும் வேலையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதையும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.
🌿 வாங்கி வந்த தேங்காய் எண்ணெயை ஒரு மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெயாக இருந்தால், உறைந்து விடும். உறையாமல் அப்படியே இருந்தால்.... கலப்படம் தான் உஷாராயிடுங்க.
நாட்டுக்கோழி முட்டை.. நம்பாதீங்க..
🍁 கோழி இட்டவுடன் நம் கையில் எடுக்கும் முட்டை மட்டுமே அசல் நாட்டுக்கோழி முட்டை. அடுத்தவர் கையில் இருந்து வாங்கும் முட்டைகள் கண்டிப்பாக நாட்டுக்கோழி முட்டை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் நாட்டுக்கோழி முட்டையிலும் கலப்படம் வந்துவிட்டது.
🍁நாட்டுக்கோழி முட்டைக்கு எப்பொழுதுமே, நல்ல வரவேற்பு உள்ளது. இதைத் தெரிந்து கொண்டு தான், பிராய்லர் கோழி முட்டையை, தேயிலைத் தண்ணீரில் நனைத்து, பழுப்பு நிறமாக்கி, நாட்டுக்கோழி முட்டைன்னு விற்பனை செய்வதும் நடந்து கொண்டு உள்ளது.
🍁வாங்கி வந்த முட்டையை, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். நாட்டுக்கோழி முட்டையாக இருந்தால் எதுவும் ஆகாது. கலப்பட முட்டையாக இருந்தால் டீ சாயம் வெளுத்து விடும்.
🍁எனவே, எந்த பொருளை வாங்கினாலும் நன்கு ஆராய்ந்து வாங்குவது தான் நமக்கும், நம் உடல் நலத்திற்கும் நல்லது.

Reviewed by Bright Zoom
on
February 16, 2019
Rating:
No comments: