ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!!


ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!!




Bright Zoom(18-2-2019)

Computer science teacher changes educational status....

கணினி அறிவியல் ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!!

அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, TET தேர்ச்சி கட்டாயமாக இருந்தது.

 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு,TET தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.

 தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 1998ல், அறிமுகம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியல் படிப்புக்கு, முதலில், கம்ப்யூட்டர் டிப்ளமா முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.


பின்னர் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது அரசு பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, ஆசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.அரசு பள்ளிகளில், 2,689 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில், 814 இடங்கள் காலியாக உள்ளன.


அவை, புதிய கல்வித்தகுதி அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர், கிரேடு - 1 என்ற பதவியாக நிரப்பப்பட உள்ளன. தற்போது பணியாற்றுவோர், கம்ப்யூட்டர் ஆசிரியர், கிரேடு - 2 என, அழைக்கப்படுவர்.

கிரேடு - 2 பதவியில் உள்ளவர்கள், குறைந்த பட்சம், எட்டு ஆண்டுகள் அனுபவத்துடன், முதுநிலை கல்வித்தகுதி பெற்றிருந்தால், எதிர்காலத்தில், கிரேடு -1 நிலைக்கு பதவி உயர்வு கொடுக்கப்படும்.

பின்னர் கிரேடு - 2ல் பணியாற்றுவோரின் பணியிடங்கள், ஓய்வு, மரணம் உள்ளிட்ட, காரணங்களால் காலியானால், அந்த இடம், கிரேடு - 1 ஆக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!! ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!! Reviewed by Bright Zoom on February 18, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.