வாழை இலையிலும் சம்பாதிக்கலாம் !!

வாழை இலையிலும் சம்பாதிக்கலாம்...

ஆனால் கவனம் தேவை...!!



Bright Zoom (19-2-2018)

வாழை இலையிலும் சம்பாதிக்கலாம் !!

🌱வாழையில் காய்களும், பழங்களும் மட்டும் தான் வருமானம் கொடுக்கும் என்று பல விவசாயிகள் நம்பி கொண்டு இருக்கின்றனர். ஆனால் காய் மற்றும் பழத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கு அதில் ஒரு சில சமயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகள் கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் இதிலும் நல்ல வருமானம் பெற முடியும்.

வாழையில் அன்றாட வருமானம் :

🌱தற்பொழுது அனைத்து இடங்களிலும் வாழை இலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

🌱அதிலும் சாப்பாட்டு இலை மற்றும் டிபன் இலை என்று இரண்டு வகைகள் உள்ளன.

🌱வாழை இலைக்கான ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம்.

🌱அதிலும் பூவன் இரகம் தான் சிறந்தது. கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் இரகங்களும் இலைக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.

🌱தினமும் அறுவடை செய்கின்ற வகையில், சுழற்சி முறையில் அறுவடை செய்தால் தினமும் வருமானம் பார்க்கலாம்.

கவனம் தேவை :

🌱வாழை இலை சாகுபடி செய்வதில் உள்ள பிரச்சனை காற்று தான். அதிக காற்று அடிக்கும் இடங்களில் வாழை சாகுபடி செய்யக்கூடாது.

🌱வாழை இலை சாகுபடி செய்யும் நிலத்தை சுற்றிலும் வரப்புகளில் அகத்தி மற்றும் கிளைரிசிடியா போன்றவற்றை உள் வரிசையில் நடவு செய்ய வேண்டும்.

🌱சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்களை வெளிவரிசையில் நடவு செய்ய வேண்டும்.

🌱இவ்வாறு காற்று தடுப்பான்களை அமைப்பதன் மூலம் இலைகளை கிழியாமல் பார்த்துக்கொள்ளலாம்.

🌱மேலும் இலைகள் விரிவடைய சூரியவெப்பம் மிகவும் முக்கியம். வாழை இலை மரங்கள் அடர்த்தியாக இருந்தால் அவற்றுக்கு இடையில் வெப்பம் குறைந்து இலைகள் வெளிவருவது தடைபடும்.

🌱எனவே, தேவையான அளவு இடைவெளி விட்டு வாழை மரங்களை நடவு செய்ய வேண்டும்.

விற்பனை வாய்ப்புகள் :

🌱வாழை இலையில் நல்ல விலை பெற வாழை இலைகளின் நீளம் நான்கு முதல் ஐந்தரை அடி வரையிலும், அகலம் இரண்டரை அடி வரையிலும் இருக்க வேண்டும்.

🌱பெரும்பாலான உணவகங்களிலும் சாப்பாட்டிற்காக தலை இலைகளின் நுனிப்பகுதியையும் அதற்கு கீழ்பகுதியில் உள்ள இலைப்பரப்பையும் வட்டமாக வெட்டி பயன்படுத்தி வருகின்றனர்.

🌱முறையாக பயிர் செய்தால் ஒரு வாழை மரத்தில் இருந்து ஆறாவது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 2 முதல் 3 பெரிய இலைகளை அறுக்கலாம்.

🌱ஒரு பெரிய இலையில் இருந்து ஒரு சாப்பாட்டு இலையும், நான்கு டிபன் இலையும் வெட்டி எடுக்கலாம்.

🌱200 பெரிய இலைகள் கொண்ட ஒரு கட்டு 600 ரூபாயும், சிறிய வாழை இலைகள் அடங்கிய ஒரு கட்டு 300 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

🌱விற்பனை காலங்களில் 600 முதல் 800 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

🌱ஒரு ஏக்கரில் உள்ள 600 வாழை மரத்தில் இருந்து ஒரு மாதத்தில் 18000 இலைகள் வரை அறுக்கலாம்.

🌱ஒரு இலைக்கு சராசரியாக ஒரு ரூபாய் என்றால் கூட, ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கும்.

வாழை இலையின் பயன்கள் :

🌱வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், முடி கருப்பாக நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

🌱வாழை இலையில் சாப்பாடு பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்.

🌱தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது படுக்க வைப்பதால் தீக்காயத்தின் தாக்கமானது குறையும்.

🌱இவ்வாறு வாழை இலையின் மருத்துவப் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

🌱எனவே, வாழை இலையை விற்பனை செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்.




வாழை இலையிலும் சம்பாதிக்கலாம் !! வாழை இலையிலும் சம்பாதிக்கலாம் !! Reviewed by Bright Zoom on February 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.