தலையணை உறை தயாரிப்பு...!
◆ பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல். ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். ஆனால் தலையணை உறை தைக்க எவ்வித பயிற்சியும் தேவை இல்லை. நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் தலையணை உறை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
◆ஒரு பழைய தையல் மெஷினை மட்டும் வாங்கி போட்டால் போதும். உறை தைக்க பெரிய பயிற்சி வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் தலையணை உறை தைக்க பழகிவிடலாம். தலையணை உறையோடு டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.
தேவையான பொருட்கள்:
குறைந்தபட்சம் 10க்கு 15 அடி நீள, அகலமுள்ள அறை உறைக்கான துணிதையல் மெஷின் ஸ்டூல்கட்டிங் டேபிள்கத்தரி ஆகியவை தேவை. உறைக்கான துணிகள் கிடைக்கும் இடங்கள்:
◆ தலையணை உறைக்கென்று குறைந்த அகலமான 20 இஞ்ச் அளவில் நெய்யப்படும் துணிகளை வாங்க வேண்டும். ஈரோடு கனி மார்க்கெட்டில் செவ்வாய்தோறும் நடக்கும் ஜவுளி சந்தையில் பல்வேறு ரகங்கள், வண்ணங்கள், டிசைன்களில் தலையணை உறை துணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
தைப்பது எப்படி?
◆ ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள்ளன. அதற்கேற்ற நீளங்களில் துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நு}ல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார்.
◆தையல் மெஷினில் பவர் பெடலை பொருத்தி சிலர் தைக்கிறார்கள். இதற்கு மின்சார செலவு ஆகும். லாபத்தில் ஒரு பகுதி மின்கட்டணத்துக்கு சென்று விடும். மேலும் பவர் பெடல் விலை ரூ.9 ஆயிரம். அதை வாங்குவதால் முதலீடும் அதிகரிக்கும். பவர் பெடல் இல்லாத தையல் மெஷினை பயன்படுத்துவதே நல்லது. தையல் மெஷினை காலால் இயக்குவதால் நடை பயிற்சி மற்றும் உடல் பயிற்சி மேற்கொண்ட பலன் கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள், வெளியே நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத பெண்கள் தையல் மெஷின் இயக்கினால் உடற்பயிற்சியாக அமைவதோடு லாபமும் கிடைக்கும்.
லாபம்:
◆ ஒரு தலையணை உறைக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விலை வைத்து விற்கலாம். கூடுதலாக தையல் மெஷின் போட்டு, பெண்களை வேலைக்கு அமர்த்தி கூடுதலாக தைக்கலாம். இதனால் லாபம் அதிகரிக்கும்.
தலையணை உறை தயாரிப்பு...!
Reviewed by Bright Zoom
on
February 11, 2019
Rating:
No comments: