வரலாற்றில் இன்று ...! அடிமைத்தனத்தை எதிர்த்த ஆபிரகாம் லிங்கன் ,சார்லஸ் ராபர்ட் டார்வின்,பிறந்த தினம் !



வரலாற்றில் இன்று ...!

அடிமைத்தனத்தை எதிர்த்த
ஆபிரகாம் லிங்கன் ,சார்லஸ் ராபர்ட் டார்வின்,பிறந்த தினம் !

அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்த வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார்.

இவர் நியு ஆர்லியன்சில் வசித்தபோது கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என தன்னுடைய சிறு வயதில் உறுதியெடுத்தார்.

இவர் தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தோல்விகளின் செல்ல மகனாக தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து, பிறகு 25வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் வென்றார்.

1860ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டுப் போர் 4 ஆண்டுகள் நடைபெற்று, எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசிய கெஸ்டிஸ்பர்க் உரை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

1864ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய லிங்கன் தனது 56வது வயதில் (1865) மறைந்தார்.


சார்லஸ் ராபர்ட் டார்வின்


உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.

தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி
The Cause of theBeagle  என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி
On Tte Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு தனது 73வது வயதில் மறைந்தார்.

ஆபிரகாம் லிங்கன் ,சார்லஸ் ராபர்ட் டார்வின்,பிறந்த தினம் !


முக்கிய நிகழ்வுகள்

🌀 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி.யு.போப் மறைந்தார். இன்றைய வரலாற்று நிகழ்வுகள் Pனுகு வடிவிலும், மற்றவர்களுக்கு ளாயசந செய்யும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை னுழறடெழயன செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

Keywords:

பிப்ரவரி-12
வரலாற்றில் இன்று ...!
பிப்ரவரி -12 நிகழ்வுகள்,
ஆபிரகாம் லிங்கன் ,
சார்லஸ் ராபர்ட் டார்வின்,
பிறந்த தினம் !
முக்கிய நிகழ்வுகள்,




வரலாற்றில் இன்று ...! அடிமைத்தனத்தை எதிர்த்த ஆபிரகாம் லிங்கன் ,சார்லஸ் ராபர்ட் டார்வின்,பிறந்த தினம் ! வரலாற்றில் இன்று ...!  அடிமைத்தனத்தை எதிர்த்த  ஆபிரகாம் லிங்கன் ,சார்லஸ் ராபர்ட் டார்வின்,பிறந்த தினம் ! Reviewed by Bright Zoom on February 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.