மரக்கறி வியாபாரம்(காய்கறி)


மரக்கறி வியாபாரம்(காய்கறி)

★ புத்தியும் முயற்சியும் இருந்தால் குறைந்த வளங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். நம்மிடம் உள்ள வளங்களை ஒழுங்காகவும் சிறப்பாகவும் பயன்படுத்தினாலே போதும் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

★வீட்டுக்கு அருகில் இடமிருந்தால் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் செடிகளை வாங்கி நீங்களே பயிரிட்டு காய்கறி மரங்கள் வளர;க்கலாம். அதைபோல, தொட்டிகளில் வளரக் கூடிய காய்கறி வகைகள், பு+ வகைகளை தொட்டிகளை வாங்கி அவற்றை வீட்டில் ஒரு மூலையில் வைத்து வளர;க்கலாம்.

★ முதலில் அவற்றை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு உங்கள் உறவினர;கள், பக்கத்து வீட்டார;களுக்கு விற்பனை செய்யலாம். அதன் மூலம் மற்றவர;களுக்கும் இந்த செய்தி சென்று அவர;களும் உங்களிடம் காய்கறிகள் வாங்குவார;கள்.

★ உங்கள் பகுதியில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம் கிடைக்கும். செடிகளுக்கு போடக்கூடிய ஆர;கானிக் உரம், காய்கறி மற்றும் பு+ச்செடி விதைகள் கூட விற்கலாம்.

★ சில பெண்களுக்கு கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் நல்ல விற்பனையாகும்.

★நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால் அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர;ந்து செய்யும்போது நிரந்தர வாடிக்கையாளர;கள் கிடைப்பார;கள்.

★உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

🍐 இத்தனை தொழில் வாய்ப்புகள் நம் அருகிலேயே இருக்கையில், இதனை சரியாக பயன்படுத்தினால் நாமும் நிறையவே சம்பாதிக்க முடியும்.




மரக்கறி வியாபாரம்(காய்கறி) மரக்கறி வியாபாரம்(காய்கறி) Reviewed by Bright Zoom on February 11, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.