போன்சாய் வளர்ப்பு !!



போன்சாய் வளர்ப்பு !!


★ போன்சாய் வளர்ப்பு நகர மக்களிடையே மிக பிரபலமாக வளர்க்கக்கூடிய ஒரு மரம் வளர்ப்பு முறை. அதைப் பற்றி இங்கு காண்போம். இன்று நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் தரும் தொழிலாக போன்சாய் வளர்ப்பு மாறி வருகிறது. ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுகள் என்றும் சாய் என்றால் செடிகள் என்றும் பொருள்.

போன்சாய் வளர்ப்புக்கு தேவைப்படும் பொருட்கள் :

★ போன்சாய் வளர்ப்புக்கு செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிர கம்பிகள், கம்பி வெட்டும் குறடு, மண் அள்ளும் கரண்டி, பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் ஆழமில்லாத புந்தொட்டிகள் ஆகியவை தேவைப்படும்.

போன்சாய் மர வகைகள் :

★ விதை கொண்டு செடிகள் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், பாழடைந்த கட்டிடங்களின் பாறை வெடிப்புகளிலும் ஆற்றோரங்களில் கல் குழிகளுக்குள்ளும் வளரும் செடிகள் பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளர்ச்சி குன்றி, குள்ளமாகவும் முதிர்ந்தும் காணப்படும். இது போன்ற செடிகளை வேருடன் கொணர்ந்து போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம்.

★ நாற்றுப் பண்ணைகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் இருக்கும் செடிகள் வளர்ச்சி குன்றியும் முதிர்ந்தும் காணப்படும். இது போன்ற செடிகளைச் சேகரித்தும் போன்சாய் கலைக்குப் பயன்படுத்தலாம்.

போன்சாய்க்கு ஏற்ற மரங்கள் :

★ பொதுவாக நம் நாட்டு மரங்களே பராமரிப்புக்கும் காலநிலைக்கும் எளிதாகவும், ஏற்றதாகவும் இருக்கும்.

★ஆலம், அரசு, புங்கன், பைகஸ் பென்சமினா, வேம்பு, இலுப்பை, வாகை, பைன், ஜூனிபர் ஆகிய மரங்களும், மாதுளை, பீச், மேப்பிள், க்ராப் ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழ மரங்களும், காகிதப்பகாகிதப்பூ, குல்மோகர் போன்ற மலர் மரங்களும், சில கள்ளி வகைகளும் போன்சாய்க்கு ஏற்றவை.

வளர்க்கும் முறை :

★ஒரு மரக்கன்றை தொட்டியில் வளர்த்து விட்டால் அது போன்சாய் வளர்ப்பு ஆகாது. போன்சாய் வளர்ப்பில் முக்கியமானது அதற்கெனவே உருவாக்கப்பட்ட முறைகள்.

★இயற்கையில் வளரும் மரங்களில் எத்தனை வடிவம் மற்றும் அமைப்பு உள்ளதோ அத்தனையும் இதிலும் உள்ளது. போன்சாய் வளர்ப்பில் நேர்போக்கு, முறையற்ற நேர்போக்கு, சாய்வான போக்கு, அருவிப்போக்கு ஆகிய முக்கிய பாணிகளோடு, பாதி அருவிப்போக்கு, பாறைகளை வைத்து உருவாக்குதல், காடுகள் போன்று உருவாக்குதல் போன்ற முறைகள் உள்ளது.

முறையான நேர்போக்கு :

★முறையான நேர்போக்கில் மரத்தின் நடுத்தண்டு நேராகவும், அடி பெருத்தும், நுனி சிறுத்தும் இருக்கும். கிளைகள் ஒரே அளவில், எல்லா பக்கங்களிலும் சமமாக இருக்கும்.

முறையற்ற நேர்போக்கு :

★முறையற்ற நேர்போக்கில் ஒரு சில மரங்கள் இயற்கையாகவோ, காற்று, வெளிச்சத்தைத் தேடியோ, வலது புறமாகவோ, இடதுபுறமாகவோ சற்று வளைந்து பின் நேராக வளரும்.



போன்சாய் வளர்ப்பு !!  போன்சாய் வளர்ப்பு !! Reviewed by Bright Zoom on February 11, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.