கறிவேப்பிலை பொடி...

கறிவேப்பிலை பொடி...

Bright Zoom TNPSC Tamil

 நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒரு தொழில் வாய்ப்பு அமைந்து இருக்கிறது. அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, முறையாக ஆரம்பித்தாலே நமக்கான தொழில் வாய்ப்பு பிரகாசமானதாக மாறிவிடும். அத்தகைய வகையில் உணவு சம்பந்தபட்ட தொழிலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளதால், கொஞ்சம் புதுமையாக யோசித்தால் போதும், நமக்கென அங்கீகாரத்தை அடைந்து விட முடியும். இன்று கறிவேப்பிலை நம் உணவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது, என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இதனுடைய மருத்துவ குணங்கள் மிக அதிகம். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை அலச்சியப்படுத்துகிறோம். இதனை கொஞ்சம் வித்தியாசமாக, பொடியாக செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடியும். இப்போது இப்பொடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கட்டுகடலை பருப்பு - 1 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிசீரகம் - 1ஃ2 தேக்கரண்டிமிளகு - 1ஃ2 தேக்கரண்டிமல்லி - 1ஃ2 தேக்கரண்டிவர மிளகாய் - தேவைக்கு ஏற்பஉப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை விளக்கம் :

👉 முதலில் கறிவேப்பிலையை நீரில் அலசி உலர விட வேண்டும். உலர்ந்த கறிவேப்பிலையை அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்து மசாலா மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

👉 இந்த வறுத்த கலவையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நம் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாக்கெட்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார் ஆகிவிடும்.

பயன்கள் :

👉 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பொடியை உணவில் பயன்படுத்தும் போது முடியை வலுவாக்குகிறது, கண்பார்வையை உறுதியாக்கிறது மேலும் இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கிறது.

விற்பனை முறை :

👉 சிறிய மற்றும் பெரிய அளவுள்ள பாக்கெட்களில் அடைத்து அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.


கறிவேப்பிலை பொடி... கறிவேப்பிலை பொடி... Reviewed by Bright Zoom on February 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.